பிட்காயின் முதலீடு என்பது தற்போது பரவலாக உலகளவில் அதிகரித்து வருகின்றது. இதனால் பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களில் முதல் முறையாக இன்று 45,000 டாலர்களையும் உடைத்துக் காட்டியுள்ளது.
சமீபத்தில் உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியாக இருக்கும் பிட்காயின் மதிப்பு 58,000 டாலர்களையும் எட்டியது. ஆனால் அது தொடர்ச்சியான நிலைக்கவில்லை எனலாம்.
பலத்த சரிவில் கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சி டிராக்கரான CoinGeckoன் படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்த கிரிப்டோகரன்சியானது 51,982.84 டாலர்களில் இருந்து, 44,537.65 டாலர்களாக சரிந்தது. கடந்த பிப்ரவரி 11 அன்று இந்த டிஜிட்டல் நாணயம் 45000 டாலர்கள் லெவலில் வர்த்தகமாகியது.
கூடுதலாக முதலீடு செய்ய திட்டம்
டெஸ்லா மற்றும் மைக்ரோ ஸ்ட்ராடஜி போன்ற முக்கிய நிறுவனங்களின் ஆர்வத்தால் தூண்டப்பட்ட பிட்காயின், பிப்ரவரி 21 அன்று அதன் 58,640.77 டாலர்களை எட்டியது. அதன் பின்னர் தற்போது சுமார் 21 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கிடையில் கிரிப்டோ கரன்சியில் ஆரம்பத்திலேயே நுழைந்த மைக்ரோ ஸ்ட்ராடஜி நிறுவனம் கூடுதலாக 2.17 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்னும் குறையலாம்
மொத்தமாக 90,531 பிட்காயினை தங்களது இருப்புக்குள் கொண்டு சென்றது. பிட்காயினில் நிச்சயம் திருத்தம் இருக்கும். 50000 டாலர் என்பது முதல் நிறுத்தமாக இருக்கலாம். இதே இரண்டாவது கால் 40000 டாலர்களாக குறைக்கப்படலாம். அதே நேரத்தில் 30,000 டாலர்களை கூட தொட்டாலும் தொடலாம். ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.
நிபுணர்கள் எச்சரிக்கை
ஏனெனில் சில நிறுவனங்கள் பிட்காயினை ஏற்றுக் கொண்டிருந்தாலும், பிட்காயினை, இன்னும் பரவலாக டிஜிட்டல் கட்டணமாக மாறுவதற்கு வெகு தொலைவில் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதிலும் இந்தியாவில் இந்த கிரிப்டோகரன்சிகள் தடை செய்யப்படலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. எனினும் இது எப்போது அமலுக்கு வரும். இது ஏற்றுக் கொள்ளப்படுமா?


Click it and Unblock the Notifications