Bitcoin.. வரலாற்று உச்சத்தில் இருந்து கிட்டதட்ட 10% வீழ்ச்சி.. என்ன காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிட்காயின் இன்று உலக நாடுகளில் ஒரு முதலீடாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு டிஜிட்டல் கரன்சியாகும். எனினும் மத்திய அரசு இதனை இந்தியாவில் தடை செய்யலாம் என கூறப்படுகிறது.

 

எனினும் சர்வதேச அளவில் பிட்காயினில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் கடந்த ஞாயிற்றுகிழமையன்று பிட்காயின் அதன் வரலாற்று உச்சமான 61,711.87 டாலர்களை தொட்டது.

இந்த நிலையில் திங்கட்கிழமை நிலவரப்படி, மீண்டும் 56,000 டாலர்களை தொட்டுள்ளது. இது புராபிட் புக்கிங் காரணத்தினால் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்..

நிபுணர்கள் எதிர்பார்ப்பு

நிபுணர்கள் எதிர்பார்ப்பு

இது பங்கு சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தின் எதிரொலியாக, பிட்காயின் மதிப்பும் சரிவினைக் கண்டு வருகின்றது. அதோடு அமெரிக்காவில் 1.9 டிரில்லியன் டாலர்கள் கொரோனா ஊக்கத்தொகையானது இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. இதன் காரணமாக இன்னும் பிட்காயின் சந்தையில் வாங்குவது அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

10% பிட்காயின் வீழ்ச்சி

10% பிட்காயின் வீழ்ச்சி

எப்படி இருப்பினும் திங்கட்கிழமையன்று பிட்காயின் மதிப்பானது 10% வீழ்ச்சி கண்டு, 55,391.8 டாலர்களாக குறைந்துள்ளது. இது அமெரிக்க பத்திர லாபமும் அதிகரித்து வரும் நிலையில், இந்த டிஜிட்டல் சொத்தின் மதிப்பும் குறைந்துள்ளது. கடந்த மாதம் அதன் புதிய உச்சமான 58,000 டாலர்கலை தொட்ட பின்னர், 43,000 மீண்டும் தொட்டது.

இந்தியாவில் தடையா?
 

இந்தியாவில் தடையா?

இதற்கிடையில் சர்வதேச முதலீட்டாளர்களை போலவே இந்திய முதலீட்டாளர்களுக்கும், கிரிப்டோகரன்சி சந்தையில் ஆர்வமாக இருந்தாலும், மத்திய அரசு இந்தியாவில் கிரிப்டோகரன்சியை தடை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்திய அரசின் திட்டம் என்ன?

இந்திய அரசின் திட்டம் என்ன?

கடந்த ஜனவரி மாதத்திலேயே மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியில், இந்தியாவில் மிகவும் பாதுகாப்பான முறையில் ரூபாய் மதிப்பிலான, கிரிப்டோகரன்சியை உருவாக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. உண்மையில் இது வரவேற்கதக்க விஷயம் தான். ஏனெனில் இந்தளவுக்கு ஏற்ற இறக்கம் உள்ள சந்தையில், சிறு முதலீட்டாளர்கள் காணமல் போகவே வாய்ப்புகள் அதிகம். ஆக அரசே ஒரு டிஜிட்டல் நாணயத்தினை கொண்டு வந்தால், அது பாதுகாப்பானதாகவும், வரவேற்க வேண்டிய விஷயமும் கூட.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bitcoin falls nearly 10%, slips from lifetime high on profit-booking

Bitcoin updates.. Bitcoin falls nearly 10%, slips from lifetime high on profit-booking
Story first published: Tuesday, March 16, 2021, 18:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X