உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியாக இருக்கும் பிட்காயின் கடந்த சில நாட்களாகத் தொடர் சரிவை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக டேப்ரூட் அப்டேட் மூலம் அதிகப்படியான முதலீட்டு வாய்ப்புகளைப் பெற முடியும் எனப் பலரும் நினைத்த காரணத்தால் அதிகளவிலானோர் முதலீடு செய்தனர். இதனால் அக்டோபர் மாதம் பிட்காயின் புதிய உச்சத்தைத் தொட்டது.
ஆனால் கடந்த சில வாரத்தில் மட்டும் பிட்காயின் மதிப்பு சுமார் 20 சதவீதம் வரையில் சரிவை எதிர்கொண்டு உள்ளது.
கிரிப்டோ சந்தை
கிரிப்டோ சந்தையில் முதலீட்டாளர்கள் மாறுப்பட்ட திட்டத்தில் முதலீடு செய்யும் காரணத்தால் டேப்ரூட் அப்டேட் தாண்டி முதலீட்டாளர்கள் சிறிய சந்தை மதிப்புக் கொண்ட கிரிப்டோகரன்சியிலும், புதிய கிரிப்டோகரன்சியிலும் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இதனால் பல பெயர் தெரியாத கிரிப்டோகரன்சிகள் 1000, 2000 சதவீதம் எனத் தாறுமாறாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
பிட்காயின் சரிவு
இதனால் முன்னணி கிரிப்டோகரன்சிகள் அனைத்தும் அதிகப்படியான சரிவைக் கடந்த ஒரு வாரமாக எதிர்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாகப் பிட்காயின் அக்டோபர் உச்ச விலையில் இருந்து சுமார் 20 சதவீதம் வரையிலான சரிவை பதிவு செய்துள்ளது. இந்தச் சரிவின் மூலம் உச்சத்தில் முதலீடு செய்தவர்கள் அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டனர்.
பிட்காயினின் இன்றைய விலை
பிட்காயின் இன்று பெரும் சரிவில் இருந்து மீண்டு 3.72 சதவீத உயர்வுடன் 58,582.88 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. மேலும் இந்த 20 சதவீத சரிவில் பிட்காயினின் மொத்த சந்தை மதிப்பு 1.01 டிரில்லியன் டாலர் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வாரத்தில் பிட்காயினின் மதிப்பு 55,885.06 டாலர் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது,
Artificial Intelligence கிரிப்டோ
இதேபோல் எதிரியம், பினான்ஸ் காயின் சோலானா, டெதர், கார்டானா ஆகிய முன்னணி கிரிப்டோகரன்சிகளும் இன்று உயர்வுடன் காணப்படுகிறது. மேலும் Artificial Intelligence என்ற பெயரில் இயங்கும் ஒரு கிரிப்டோகரன்சி கடந்த 24 மணிநேரத்தில் 1417.09 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications