உலகளவில் பொதுவான கரன்சிகளாக பிட்காயின் உள்லிட்ட கிரிப்டோ கரன்சிகள் வேகமாக வளர்ச்சி அடைய தொடங்கின. ஆனால் ஏறிய வேகத்திலேயே இவை சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் கிரிப்டோ நாணயங்களுக்கு சாதகமான நிலைப்பாடு கொண்டவர் என்பதால் கடந்த ஆண்டு அவர் அதிபராக பதவி ஏற்ற உடனே கிரிப்டோ நாணயங்களின் மதிப்பு வேகமாக உயரத் தொடங்கியது. அமெரிக்க பங்குச்சந்தையிலும் கிரிப்டோ நாணயங்களுக்கான ஈடிஎப் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால். பிட்காயின் , எத்திரியம் போன்ற கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு பல மடங்கு உயர்வு கண்டது.

இனி பிட்காயின் எல்லாம் வாங்கவே முடியாது என்ற நிலை சென்றது . கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி பிட்காயின் மதிப்பு உலக சந்தையில் 1, 26,080 டாலர்களையும் இந்திய ரூபாயின் மதிப்பில் 1கோடி ரூபாய்க்கு மேலும் என வரலாற்றிலேயே இல்லாத உச்சத்தை எட்டியது. ஆனால் அதன் பின்னர் பிட்காயினுக்கு இறங்குமுகமாகவே இருக்கிறது.
கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. பிப்ரவரி 2ஆம் தேதி ஆன இன்று சர்வதேச சந்தையில் ஒரு பிட்காயின் மதிப்பு 75,000 டாலர்களுக்கும் கீழ் வீழ்ச்சி அடைந்தது. கடந்த அக்டோபர் மாதம் வரலாற்று உச்சபட்ச விலை எட்டியதிலிருந்து பிட்காயின் மதிப்பு ஏறுவதும் இறங்குவதுமாக தான் இருக்கிறது. ஆனால் டிசம்பர் மாதத்தில் இருந்து பெரிய அளவிலான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இன்றைய தினம் வரலாற்றிலேயே இல்லாத அளவாக கிட்டத்தட்ட 75 ஆயிரம் டாலர்களுக்கும் கீழ் சென்று விட்டது. இந்திய ரூபாயின் மதிப்பில் பார்க்கும் போது தற்போது ஒரு பிட்காயின் விலை 68 லட்சமாக இருக்கிறது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பிட்காயின் மதிப்பு இந்த அளவுக்கு விலை சரிந்திருப்பது இதுவே முதன்முறையாகும்.
டிமாண்ட் குறைந்தது, லிக்விடிட்டி சரிந்து வருவதே இதற்கு முக்கிய காரணம் . கடந்த சில வாரங்களாக அதிகமான முதலீட்டாளர்கள் கிரிப்டோ கரன்சிகளை விற்பனை செய்துவிட்டு வெளியேறுவதை பார்க்க முடிகிறது என்றும் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அமெரிக்க பங்குச் சந்தையில் ஸ்பாட் பிட்காயின் ஈடிஎப்பில் இருந்து 1.6 பில்லியன் டாலர்களை முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர்.
மேக்ரோ பொருளாதார சூழல் மேம்பட்டு வருவது, புவிசார் பதற்றங்கள் குறைந்து வருவது மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக கெவின் வார்ஷ் தேர்வு செய்யப்பட்டிருப்பது உள்ளிட்டவை அமெரிக்கா டாலரையும், அமெரிக்க பங்கு சந்தையும் வலுப்படுத்த தொடங்கியிருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கம், பிட்காயின் உள்ளிட்டவற்றில் இருக்கும் பணத்தை எடுத்து மீண்டும் மற்ற முதலீடுகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கின்றனர்.பிட்காயின் மதிப்பு 70000 டாலர்களை வரை சரிந்து விட்டு மீண்டும் 80000 டாலர்களுக்கு மேல் செல்ல வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications