கிரிப்டோகரன்சி முதலீடுகள் மீது அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கிரிப்டோ மீதான முதலீட்டில் கிடைக்கும் லாபத்தில் அதிகப்படியான வரி விதிக்கப்பட்டதன் மூலம் இளம் முதலீட்டாளர்கள் கிரிப்டோ சந்தை முதலீட்டில் இருந்து தெறித்து ஓடினர்.
இதற்கிடையில் அமெரிக்காவில் FTX வர்த்தகத் தளம் திவாலானது, சமீபத்தின் பைனான்ஸ் அமைப்பு முறைகேடான நிதி பரிமாற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டு அதன் சிஇஓ ராஜினாமா செய்தது, அபராதம் செலுத்தியது எனக் கிரிப்டோ சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி அடைய துவங்கியது.

இந்தச் சூழ்நிலையில் கிரிப்டோ சந்தையில் மிகப்பெரிய கரன்சியாகக் கருதப்படும் பிட்காயின் இந்த ஆண்டு முதல் முறையாக 40,000 டாலருக்கு மேல் உயர்ந்து உலகளவில் இருக்கும் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கும் அலாரம் அடித்து எழுப்பியுள்ளது.
பிட்காயின் 40000 டாலர் வரையில் உயர முக்கியமான காரணம், அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புக்கான வாய்ப்புகள் மார்ச் மாதத்திலும் குறைந்துள்ளதால் டாலர் மதிப்பு சரியத் துவங்கியுள்ளது. இதேபோல் அமெரிக்க-பங்குச் சந்தை நிர்வாகம் பிட்காயின் பண்டுகளை விரைவில் ஒப்புதலை அளிக்கும் என வர்த்தகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் வரலாற்றைப் பார்க்கும் போது, எப்போதெல்லாம் டாலர் மதிப்பு சரிகிறதோ அப்போதெல்லாம் பிட்காயின் விலை உயரத் துவங்கியுள்ளது. இதன் படி தற்போது டாலர் மதிப்பு சரியும் நேரத்தில் பிட்காயின் உயர்ந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கிரிப்டோ நாணயமான பிட்காயின் ஞாயிற்றுக்கிழமை வர்த்தகத்தில் $40,210 ஆக உயர்ந்தது, இது ஏப்ரல் 2022 க்குப் பிறகு அதிகபட்ச அளவீடாகும். திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கியதில் இருந்து 40000 டாலருக்கு மேல் வர்த்தகம் செய்யப்படும் வேளையில் தற்போது 41,841.40 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications