எகிறி அடித்த பிட்காயின்.. 2 வருடத்திற்குப் பின்பு ஜாக்பாட்..!

ஏப்ரல் 2022 க்குப் பிறகு முதன்முறையாகச் செவ்வாய்க்கிழமை பிட்காயின் விலை 3 சதவீதம் வரையில் உயர்ந்து 45,000 டாலரை தாண்டியது. கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது மட்டும் அல்லாமல் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது, இதனால் பல நாள் கிரிப்டோ முதலீட்டுப் பக்கம் செல்லாத பலர் திரும்ப ஈர்த்துள்ளது.

பிட்காயின் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 21 மாத உயர்வான 45,386 டாலர் அளவீட்டை தொட்டது, இதோடு திங்கட்கிழமை வர்த்தகத்தில் 2% அதிகரித்து $44,980 ஆக இருந்தது நிலையில், இன்று காலை 45,000 டாலரை தாண்டியது குறிப்பிடத்தக்கது. இன்று காலை வர்த்தகத்தில் எதிரியம் 1 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து 2,376 டாலர் அளவீட்டில் உள்ளது.

எகிறி அடித்த பிட்காயின்.. 2 வருடத்திற்குப் பின்பு ஜாக்பாட்..!

பிட்காயின் மதிப்பு 2023 ஆம் ஆண்டில் சுமார் 152 சதவீதம் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தைக் கொடுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் பிட்காயின் விலை தாறுமாறாக வளர்ச்சி அடைந்த நிலையில், 2022 ஆம் நிதியாண்டில் பல பெரிய திட்டங்கள் மூடப்பட்டது, சீனாவில் கிரிப்டோ முதலீட்டு, மைனிங் ஆகியவற்றுக்கு மொத்தமாகத் தடை விதிக்கப்பட்டது ஆகியவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

2023 ஆம் ஆண்டில் FTX தளத்தின் தலைவர் பேங்க்மேன் ப்ரைட் ஆகியவை கைது செய்யப்படு, சுமார் 7 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டது மூலம் கிரிப்டோ முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கை உருவானது. இதேபோல் பிட்காயின் தொடர்பான ETF திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்படுவது குறித்த பேச்சுவார்த்தையும் 2023ல் பிட்காயின் 152 சதவீதம் வரையில் உயர முக்கியக் காரணமாகும்.

இந்தியாவில் கிரிப்டோ முதலீட்டுக்கு அதிகப்படியான தடை, வரி, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் கிரிப்டோ தொடர்பான முதலீட்டை விட்டு பெரிய அளவில் வெளியேறியிருந்தாலும், இன்னும் கணிசமான முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர்.

பிட்காயின் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 6.76 சதவீதம் உயர்ந்து 45,204.45 டாலர் அளவீட்டில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதன் மொத்த சந்தை மதிப்பு 887 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

மேலும் எதிரியம் 2,391 டாலரிலும், டெதர் 1 டாலருக்கும், சோலானோ 112.97 டாலருக்கும், பினான்ஸ் 318 டாலருக்கும், ரிப்பிள் 0.6346 டாலருக்கும், USDC 1 டாலருக்கும், கார்டானோ 0.6294 டாலருக்கும் வர்த்தகமாகி வருகிறது. டாப் 10 கிரிப்டோகரன்சியில் அனைத்துமே வளர்ச்சி பாதையில் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+