அமெரிக்க பங்குச்சந்தை அறிவிப்பால் பிட்காயின் 60,000 டாலரை தொட்டது..!

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோ சந்தைக்கு சாதகமாக அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEC ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் மெல்ல மெல்ல உயர்ந்து வந்த பிட்காயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 4000 டாலர் அதிகரித்து கடந்த ஆறு மாதத்தில் முதல் முறையாக 60,000 டாலர் அளவீட்டை தொட்டு உள்ளது.

இப்படி என்ன அறிவிப்பை அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் SEC அறிவித்துள்ளது..?!

பிட்காயின் ETF

பிட்காயின் ETF

உலக நாடுகளில் பிட்காயின் பயன்பாட்டு அளவு எந்த அளவிற்கு அதிகரித்து வருகிறதோ அதே அளவிற்கு பிட்காயின் மீதான எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் தான் சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க சந்தையில் பிட்காயின் மீதான ETF அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான ஒப்புதல் பெற விண்ணப்பங்களை SEC அமைப்பில் சமர்ப்பிக்கப்பட்டது.

SEC அமைப்பு

SEC அமைப்பு

இந்நிலையில் ப்ளூம்பெர்க் பிட்காயின் மீதான ETF திட்டத்தை அறிமுகம் செய்ய SEC அமைப்பு அனுமதி அளிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது தகவலை வெளியிட்டது. இந்த செய்தி வெளியான முதல் பிட்காயின் மதிப்பு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

முதல் பிட்காயின் ETF

முதல் பிட்காயின் ETF

அமெரிக்காவின் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEC இதை அனுமதித்தால் முதல் முறையாக பிட்காயின் அடிப்படையான ETF ஆக இது இருக்கும். இது முதலீட்டு சந்தையில் பெரும் தாக்கதத்தை ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் பிட்காயின் மதிப்பை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும்.

பிட்காயின் விலை

பிட்காயின் விலை

இன்று ஒரு நாளில் மட்டும் பிட்காயின் மதிப்பு 56,000 டாலர் அளவீட்டில் இருந்து 59,961 டாலர வரையில் உயர் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பிட்காயின் மொத்த சந்தை மதிப்பு 1.2 டிரில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

இன்றைய கிரிப்டோகரன்சி விலை

இன்றைய கிரிப்டோகரன்சி விலை

பிட்காயின் - 59,323 டாலர் (2.61 சதவீத உயர்வு), எதிரியம் - 3,791.08 டாலர் (2.05 சதவீத உயர்வு), ரிப்பிள் - 1.12 டாலர் (1.28 சதவீத சரிவு), கார்டானோ - 2.16 டாலர் (0.72 சதவீத சரிவு), போல்காடாட் - 40.13 டாலர் (3.29 சதவீத சரிவு), டோஜ்காயின் - 0.22 டாலர் (3.96 சதவீத சரிவு).

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+