அமெரிக்கா முதலீட்டு சந்தை சிலிக்கான் லேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி திவால் மூலம் பெரும் பாதிப்பையும், தடுமாற்றத்தையும் எதிர்கொண்டுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் மாற்று முதலீட்டு திட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பெரும் பகுதி முதலீடுகள் தற்போது கிரிப்டோ சந்தைக்குள் நுழைந்துள்ளது, இதன் மூலம் பிட்காயின் மதிப்பு இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 9 மாத உச்சத்தை தொட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் கடந்த 4 நாளில் அதிகப்படியாக 30 சதவீதம் வரையில் பிட்காயின் விலை உயர்ந்துள்ளது.
சிலிக்கான் லேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி திவால் மூலம் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தாது எனவும், வட்டி விகித உயர்வின் வேகத்தையும் குறைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்காயின் விலை
புதன்கிழமை வர்த்தகத்தில் பிட்காயின் விலை சுமார் 9.6 சதவீதம் அதிகரித்து 26,533 டாலர் வரையில் உயர்ந்து ஜூன் 2022-க்கு பின்பு இந்த உச்சத்தை தொட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் பிட்காயின் விலை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சிலிக்கான் லேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி
இந்த 4 நாள் தொடர் உயர்வுக்கு முக்கியமான காரணம் அமெரிக்கா முதலீட்டு சந்தையை உலுக்கிய சிலிக்கான் லேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கிகளின் திவால் சம்பவம் தான். சிக்னேச்சர் வங்கியின் நிலைமை என்னவென்று தெரியாமல் இருக்கும் வேளையில் சிலிக்கான் வேலி வங்கியின் டெபாசிட் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக நிதி பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
USDC காயின்
சிலிக்கான் வேலி வங்கிக்கு அமெரிக்க அரசின் உதவிகள் மூலம் USDC stablecoin பெரிய அளவிலான சரிவை சந்திக்காமல் தொடர்ந்து நிலைபெற்றுள்ளது. USDC stablecoin முக்கிய நிர்வாக வட்டம் சுமார் 3.3 பில்லியன் டாலர் அளவிலான தொகையை சிலிக்கான் வேலி வங்கியில் டெபாசிட் செய்துள்ளது.
பிட்காயின்
பிட்காயின் விலை கடந்த 7 நாட்களில் 12.07 சதவீதம் அதிகரித்து 24,671.81 டாலராக உள்ளது, இதேபோல் 90 நாட்களில் 39.48 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் எதிரியம் விலை கடந்த 7 நாட்களில் 9.00 சதவீதம் அதிகரித்து 1,694.46 டாலராக உள்ளது, இதேபோல் 90 நாட்களில் 31.70 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
கிரிப்டோ
இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மட்டும் அல்லாமல் பிட்காயின், எதிரியம், பிஎன்பி, ரிப்பிள், பாலிகான், டோஜ்காயின், சோலானா, போல்காடாட், ஷிபா இனு, லைட்காயின், அவலென்சி, யூனிஸ்வாப், காஸ்மாஸ் ஆகியவை உயர்வுடன் உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications