தங்கம் விலை கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து பெரும் அதிர்ச்சி கொடுத்த இதேவேளையில் பிட்காயின் விலை தினமும் வரலாற்று உச்சத்தைத் தொட்டு வருகிறது. அமெரிக்க அரசு எப்போது பிட்காயின் ETF-க்கு அனுமதி கொடுத்ததோ, அப்போது முதல் கிரிப்டோ சந்தைக்கு ஏறுமுகம் தான்.
கிரிப்டோகரன்சி சந்தையில் முதன்மை கிரிப்டோ நாணயமாக விளங்கும் பிட்காயின் நேற்று 72,000 டாலர் என்ற புதிய வரலாற்று உயர்வைக் கண்டது. இதற்கு முக்கியக் காரணமாக, 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இருந்து பிட்காயின் மற்றும் ஈதெரியம் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் நோட்ஸ் (ETNs) ஐ ஏற்றுக்கொள்வதாக லண்டன் பங்குச்சந்தை அறிவித்ததே காரணமாகும். இது, கிரிப்டோ கரன்சி சந்தையில் பெரும் ஊக்கத்தைக் கொடுத்துள்ளது.
இந்த வரலாற்று உச்ச அளவீட்டை இன்றும் பிட்காயின் தக்க வைத்துள்ளது கூடுதல் சிறப்பாகும். இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் 72,212.81 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் பிட்காயின் 4.06 சதவீதமும், 7 நாளில் 7.12 சதவீதமும், ஒரு மாதத்தில் 49.46 சதவீதமும், ஒரு வருடத்தில் 250.99 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
சதோஷி நக்மாட்டோ என்பவரால் உருவாக்கப்பட்ட இந்தக் கிரிப்டோ நாணயம், கடந்த ஒரு மாத காலமாக விலையிலும், வர்த்தக அளவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், பாரம்பரிய நிதி நிறுவனங்களும், முதலீட்டு நிறுவனங்களும் கிரிப்டோ கரன்சிகளைத் தயக்கத்துடன் அணுகி வந்த நிலையில், அதன் மோசமான காலக்கட்டத்தில் அதிகப்படியான முதலீட்டை செய்து கைப்பற்றி தற்போது ETF வாயிலாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாகப் பிளாக்ராக் போன்ற பிரபலமான முதலீட்டு நிறுவனங்கள் பிட்காயின் முதலீட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, அமெரிக்கா முதல் இந்தியா வரையில் பல நாடுகள் இதைத் தடை செய்யும் அளவுக்குக் கடுமையான விதிமுறைகளை விதித்த மக்கள் அணுகுவதைக் குறைத்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் பெரும் முதலீட்டு நிறுவனங்கள் கிரிப்டோ சந்தையில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கின.
இதற்கு ஏற்றார் போல் பினான்ஸ், FTX வீழ்ச்சியை உடைக்கப்பட்டது மூலம் பாரம்பரிய நிதி நிறுவனங்கள் அதிக்கம் செலுத்தத் துவங்கியது. இதேவேளையில் அமெரிக்க அரசும் பிட்காயின் ETF வெளியிட அனுமதி அளித்தது. இதேபோல் தற்போது லண்டன் பங்குச்சந்தை பிட்காயின் எதிரியம் Exchange-Traded Notes (ETNs) ஏற்றுக்கொள்ளத் தயாராகியுள்ளது.
பிட்காயின் விலை உயர்வுக்குப் பின்னணியில் என்ன?: இந்த விலை உயர்வுக்கு முக்கிய தூண்டுதலாக அமெரிக்கப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (SEC) பிட்காயின் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளை (ETF) அங்கீகரித்தது. இதன் விளைவாக, பிளாக்ராக், வாங்கார்ட், வால்கைரி, வானெக் மற்றும் ஃபிடெலிட்டி போன்ற முதன்மை நிதி நிறுவனங்கள் தங்கள் சொந்த ஈ.டி.எஃப். களை அறிமுகப்படுத்தின.
கிரிப்டோ ஆராய்ச்சி நிறுவனமான கிரெபாகோவின் அறிக்கையின்படி, இந்த ஈ.டி.எஃப். மூலம் நிறுவன முதலீடுகள் வாயிலாகப் பிட்காயினுக்குள் சுமார் 41 பில்லியன் டாலர் வரையிலான முதலீடுகள் குவிந்துள்ளது. இதில் பெரும் பகுதி கடந்த 2 மாதத்தில் வந்துள்ளது. 2030க்குள் இதில் 10 டிரில்லியன் டாலர் முதலீடுகள் குவியும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதன் எதிரொலி என்ன: பிட்காயின் தற்போது 72,212.81 டாலருக்கு வர்த்தகமாகி வரும் வேளையில் அடுத்த சில மாதத்திலேயே 100000 லட்சம் டாலர் அளவை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதன் விலை உயர்வு பிற கிரிப்டோ நாணயங்களையும் பாதித்துள்ளது.
எதிரியம், சோலானா, ஷிபா இனு போன்ற பல பிரபலமான நாணயங்களும் பெரும் வளர்ச்சியைக் கண்டு உள்ளது. மீம் காயின்கள் உட்படப் பிற கிரிப்டோக்களின் விலை அதிகரிப்புக்கு உந்துதலாக அமைந்தது பிட்காயின் விலை உயர்வு.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications