பிட்காயின் மற்றும் இதர முன்னணி கிரிப்டோகரன்சி மீதான முதலீடுகளும், பிரபலங்களின் தொடர் ஆதரவும் வெள்ளிக்கிழமை இரவு வர்த்தகம் அதாவது அமெரிக்காவின் வெள்ளிக்கிழமை வர்த்தக சந்தையில் அதீத முதலீட்டின் காரணமாக ஓரே இரவில் சுமார் 3,500 டாலர் அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

நேற்று மாலையில் வர்த்தகத்தில் 53,000 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட பிட்காயின் அமெரிக்க வர்த்தக சந்தை துவங்கிய பின்பும் குறுகிய காலத்தில் அதிகப்படியான முதலீடு பெற்ற காரணத்தால் சுமார் 3,500 டாலர் அளவில் உயர்ந்து 56,563 டாலர் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இதன் மூலம் கடந்த 24 மணிநேரத்தில் 9 சதவீத வளர்ச்சியும், 2020ல் சுமார் 90 சதவீத வளர்ச்சியும் அடைந்துள்ளது. ஜனவரி 1ஆம் தேதி பிட்காயின் மதிப்பு வெறும் 29,111.52 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது உலகளவில் முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் முதலீடு செய்து வரும் காரணத்தால் தற்போது 56,563 டாலர் அளவீட்டை அடைந்துள்ளது.
சமீபத்தில் பிட்காயினுக்கு டெஸ்லா, மாஸ்டர்கார்டு, BNY மெலன் என பல முன்னணி நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், பேஸ் இசை கலைஞரான ஜீனி சிம்மனஸ் கார்டானோ கிரிப்ரோகரன்சியின் மீது சுமார் 3 லட்சம் டாலர் அளவிலான முதலீட்டை செய்துள்ளார்.
இதனால் இசை ரசிகர்கள் மத்தியில் கிரிப்டோகரன்சி மீது முதலீடு செய்ய ஆர்வம் தூண்டப்பட்டு உள்ளது. மேலும் பல முன்னணி முதலீட்டாளர்களும் தற்போது பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதால் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications