உலகளவில் கிரிப்டோகரன்சிக்கு அரசுகள் எந்த அளவிற்கு எதிர்கிறதோ அதே அளவிற்குப் பெரும் முதலீட்டாளர்கள் மற்றும் டெக் தலைவர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனாலேயே முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவிலான குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களில் டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் மற்றும் டிவிட்டர் நிறுவனத்தின் ஜாக் டோர்சி ஆகியோர் பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி குறித்து வெளியிட்ட சில முக்கியமான அறிவிப்புகள் மற்றும் கருத்துக்கள் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பிட்காயின் விலை
இதன் வாயிலாகப் பிட்காயின் கடந்த 2 நாட்களில் 12.5 சதவீதம் வரையில் அதிகரித்து 39,850 டாலர் வரையில் உயர்ந்துள்ளது, இது கிட்டதட்ட 6 வார உயர்வு என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் கிரிப்டோகரன்சி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.
எதிரியம் விலை
இதுமட்டும் அல்லாமல் பிட்காயினுக்குப் போட்டியாக எதிரியம் 2,344 டாலர் வரையில் உயர்ந்து 3 வார உயர்வைப் பதிவு செய்துள்ளது. கடந்த 3 மாதத்தில் கிரிப்டோகரன்சி சந்தையில் சிறப்பான வர்த்தகம் இதுதான்.
கிரிப்டோகரன்சி விலை
இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 11.03 சதவீதம் அதிகரித்து 38,263.34 டாலரை அடைந்துள்ளது. இதேபோல் எதிரியம் 6.97% உயர்வில் 2,321.83 டாலருக்கும், ரிப்பிள் 8.66% உயர்வில் 0.6598 டாலருக்கும், டோஜ்காயின் 13.20 சதவீத உயர்வில் 0.224 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
டெஸ்லா எலான் மஸ்க்
கடந்த வாரம் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், பிட்காயின் உற்பத்திக்காகப் பயன்படுத்தும் பசுமை மின்சார அளவு அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் டெஸ்லா நிறுவனத்தின் பிட்காயினைப் பேமெண்ட் சேவை கொண்டு வர வாய்ப்பு உள்ளது. மே மாதம் இந்தச் சேவையை நிறுத்தினார் எலான் மஸ்க்.
டிவிட்டர் ஜாக் டோர்சி
இதற்கிடையில் உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனமான டிவிட்டர்-ன் நிறுவனர் மற்றும் தலைவருமான ஜாக் டோர்சி டிவிட்டர் நிறுவனத்தின் எதிர்காலத்தில் கிரிப்டோகரன்சி மிகப்பெரிய பங்கு வகிக்கும் எனத் தெரிவித்தார்.
அமேசான் பேமெண்ட்
இதேபோல் உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் தனது பேமெண்ட் தளத்தில் விரைவில் பிட்காயினை ஏற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் இந்த வருடத்தின் இறுதிக்குள் இது மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என உறுதிப்படுத்தாத தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு வார பிட்காயின் வளர்ச்சி
கடந்த ஒரு வாரத்தில் பிட்காயின் மதிப்பு 29,691 ரூபாயில் இருந்து 39,544 டாலர் வரையில் அதிகரித்துள்ளது கிரிப்டோ முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தைக் கொடுத்துள்ளது. அதேபோல் இந்த வளர்ச்சி அதிகளவிலான கிரிப்டோ விற்பனை செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications