பிட்காயின் முதலீடு என்பது பரவலாக உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், அதன் விலையானது கடந்த ஆண்டில் இருந்து பெரும் அளவில் முதலீட்டாளர்களை ஈர்த்து வருகின்றது.
இதற்கிடையில் தொடர்ச்சியாக 5 நாட்கள் சரிவுக்கு பிறகு, பிட்காயின் விலையானது 8% அதிகரித்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் அதன் வரலாற்று உச்சத்தினை தொட்ட பிட்காயின், கடந்த வாரத்தில் பெரும் சரிவினைக் கண்டது.
கடந்த ஞாயிற்றுகிழமையன்று, மார்ச் மாத குறைந்த விலையில் இருந்து 6.7% அதிகரித்து, 52,452 டாலர்களை தொட்டது. இதே பிட்காயினுக்கு இணையாக நகரும் பிற முக்கிய நாணயங்கள் எத்தேரியம் மற்றும் எக்ஸார்பி ஆகியவை முறையே 5% மற்றும் 11% வரை ஏற்றம் கண்டன.
பைடனின் அறிவிப்பு பிறகு இழப்பு
இது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூலதன ஆதாய வரிகளை உயர்த்துவதற்கான திட்டத்தினை அறிவித்த நிலையில், இது டிஜிட்டல் முதலீடுகளை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடந்த வாரத்தில் பிட்காயின் மதிப்பான கடுமையான வீழ்ச்சியினை பதிவு செய்தது. எனினும் தற்போது அந்த இழப்புகளை மீட்டெடுக்க தொடங்கியுள்ளது.
பிட்காயின் மதிப்பு ஏற்றம்
ஏப்ரல் 14ம் தேதி 64,829.14 டாலர்களை தொட்ட பிட்காயின் மதிப்பானது, சுமார் 19% இழப்பினை பதிவு செய்துள்ளது. இருப்பினும் நடப்பு ஆண்டில் இதுவரையில் பிட்காயின் மதிப்பானது 85% மேலாக அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவின் முக்கிய முதலீட்டாளர்கள் பிட்காயின் பக்கம் திரும்பியுள்ளன. குறிப்பாக டெஸ்லா, மார்கன்ஸ் ஸ்டான்லி போன்ற நிறுவனங்கள் பிட்காயினுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன.
தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது பிட்காயின் மதிப்பானது அதன் குறைந்தபட்ச விலையில் இருந்து தற்போது மீண்டு வந்து கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 53,800 மேல் வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்சம் 54,043.43 டாலர்களாகும். குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தற்போதைய நிலவரப்படி 7.58% அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிட்காயின் பரிமாற்றத்தின் மதிப்பு 11.89 பில்லியன் டாலர் ஆகும்.
பிட்காயின் ஃபண்டு திட்டம்
தொடர்ந்து அமெரிக்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், பிட்காயின் மதிப்பானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ஜேபி மார்கன் நிறுவனம் பிட்காயின் ஃபண்டினை வெயிட தயாராகி வரும் நிலையில், பிட்காயின் மதிப்பானது ஏற்றம் காண தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications