கிரிப்டோகரன்சி சந்தையின் மிகவும் முக்கிய வர்த்தகப் பொருளாக இருக்கும் பிட்காயின் கடந்த ஒரு வாரத்தில் அதிகளவிலான வர்த்தகத் தடுமாற்றங்களையும் சந்தித்து வருகிறது.
இதற்கு முக்கியக் காரணம் சர்வதேச முதலீட்டுச் சந்தையில் ஏற்படும் தொடர் மாற்றங்கள் தான். குறிப்பாக அமெரிக்கப் பத்திர சந்தையில் உருவாகியுள்ள திடீர் முதலீடு ஆர்வம் முதலீட்டுச் சந்தையில் பெருமளவிலான மாற்றங்களை உருவாக்கியுள்ளது.
ஆனாலும் பிட்காயின் முதலீட்டாளர்களும், கிரிப்டோ சந்தை ஆய்வாளர்கள் கிரிப்டோகரன்சிக்கும் அதன் மதிப்பிற்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச்
கார்கன் என்னும் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் சிஇஓ ஜெஸ் பவெல் கூறுகையில், பிட்காயின் மதிப்பு கணக்கிட முடியாத அளவிற்கும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது எனக் கூறியுள்ளார். இந்தியாவிலும் பல முன்னணி கிரிப்டோ எக்ஸ்சேஞ் சமீபத்தில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிட்காயின் மதிப்பு
உலக மக்கள் தற்போது சந்தை முதலீட்டாளர்கள், நாணயங்களின் பலவீனமான நிலையை அறிந்துகொண்ட நிலையில் பெரும் முதலீட்டாளர்கள் முதல் சிறு முதலீட்டாளர்கள் வரையில் அனைவரும் பிட்காயின் மதிப்பைச் சரிபார்க்கத் துவங்கியுள்ளனர்.
குளோபல் கரன்சி நிலையை அடையும்
இதுமட்டும் அல்லாமல் பிட்காயின் தற்போது சந்தையில் புழக்கத்தில் இருக்கும் டாலர், யூரோ, ரூபாய் போன்று இல்லாமல் பிட்காயின் ஒரு குளோபல் கரன்சியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் உலகளவில் மிகவும் சில நிறுவனங்கள் மட்டுமே கிரிப்டோ முதலீட்டில் நேரடியாக இறங்கியுள்ளது.
பிட்காயின் மீதான பார்வை
உலக நாடுகளில் கிரிப்டோ வர்த்தகத்தில் அதிகளவிலான கட்டுப்பாடுகளையும் தடைகளை விதித்து வரும் நிலையிலும் கார்கன் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் புதிய முதலீட்டை ஈர்க்க முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. இப்புதிய முதலீட்டின் மூலம் கார்கன் நிறுவனம் 10 பில்லியன் டாலர் அளவீட்டை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 வருடத்தில் மாபெரும் வளர்ச்சி
மேலும் கார்கன் நிறுவனத்தின் தலைவர் ஜெஸ் பவெல் கூறுகையில் அடுத்த 10 வருடத்தில் பிட்காயின் குளோபல் கரன்சியாக மட்டும் அல்லாமல் ஒரு பிட்காயின் மதிப்பு 1 மில்லியன் டாலர் மதிப்பிற்கு உயரும் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications