Bitcoin Power: ஒரேயொரு அறிவிப்பு.. தாய்லாந்து நிறுவனம் 6,700% வளர்ச்சி..!

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோ சந்தையில் அனைத்து தரப்பினரும் இறங்கி வரும் நிலையில், சிறு எண்ணிக்கையில் மட்டும் பிட்காயின் உற்பத்தியில் இறங்கி வருகின்றனர்.

ஜாஸ்மின் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்

ஜாஸ்மின் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்


இப்படித் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜாஸ்மின் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் ஜூலை மாதம் பிட்காயின் உற்பத்தியில் இறங்கப் போவதாக அறிவித்து, சில வாரங்களுக்கு முன்பு தான் பிட்காயின் உற்பத்தியைத் துவங்கியது.

2021ஆம் ஆண்டில் மட்டும் ஜாஸ்மின் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 6700 சதவீதம் வளர்ச்சி அடைந்து சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

கிரிப்டோ சந்தை

கிரிப்டோ சந்தை

உலகம் முழுவதும் ரீடைல் முதலீட்டாளர்களும், நிறுவன முதலீட்டாளர்களுக்கும் கிரிப்டோ சந்தையில் நேரடியாக முதலீடு செய்து பிட்காயின் உட்படப் பல கிரிப்டோகரன்சிகளைக் கைப்பற்றி வரும் நிலையில் பல பெரும் பணக்காரர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பிட்காயின் உற்பத்தியில் இறங்கியுள்ளனர்.

தாய்லாந்து

தாய்லாந்து


அப்படிச் சரியான திட்டமிடல் உடன் சரியான நேரத்தில் பிட்காயின் உற்பத்தியில் இறங்கிய ஒரு நிறுவனம் தான் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜாஸ்மின் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம்.

பங்கு முதலீடுகள்

பங்கு முதலீடுகள்

2021 ஜூலை மாதம் பிட்காயின் உற்பத்தியில் இறங்கப் போவதாக அறிவித்த நாள் முதல் ஜாஸ்மின் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனப் பங்குகள் மீது அதிகப்படியான முதலீடுகள் குவிந்து வருகிறது.

8 பிட்காயின்

8 பிட்காயின்

ஜாஸ்மின் டெக்னாலஜி நிறுவனம் இதுவரை 325 கிரிப்டோ மைனிங் இயந்திரத்தைக் கொண்டு கடந்த சில வாரத்தில் 8 பிட்காயினை உருவாக்கியுள்ளது.

2022ஆம் ஆண்டில் ஜாஸ்மின் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் சுமார் 98 மில்லியன் டாலரை முதலீடு செய்து 7000 மைனிங் இயந்திரத்தை வாங்கத் திட்டமிட்டு உள்ள நிலையில் மொத்த வருமானத்தில் 80 சதவீதம் வருமானம் பிட்காயின் உற்பத்தி வாயிலாகப் பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது ஜாஸ்மின் டெக்னாலஜி நிறுவனம்.

பாங்க் ஆப் தாய்லாந்து

பாங்க் ஆப் தாய்லாந்து

தாய்லாந்து நாட்டில் கிரிப்டோ முதலீடுகள் நீண்ட காலமாக இருந்தாலும், கிரிப்டோ மைனிங் இந்நாட்டிற்குப் புதியது. பாங்க் ஆப் தாய்லாந்து கடந்த மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தாய்லாந்து நாட்டில் இருக்கும் 7 உரிமம் பெற்ற கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்-ன் மொத்த விற்றுமுதல் நவம்பர் மாதத்தில் 221 பில்லியன் பாத் அதாவது 6.58 பில்லியன் டாலர், ஆனால் கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு வெறும் 18 பில்லியன் பாத் மட்டுமே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+