உலகளாவிய நிதிச் சந்தையில் ஆபத்தான முதலீடுகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதால், உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் நாணயமான பிட்காயின் (Bitcoin) விலை அதிரடியாக சரிந்துள்ளது. அதாவது, ஒரு பிட்காயின் விலை 80,553 அமெரிக்க டாலராக குறைந்தது. இதேபோல், இரண்டாவது பெரிய கிரிப்டோவான ஈதர் (Ether) மதிப்பும் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்ததால், கிரிப்டோ சந்தையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
திடீர் சரிவுக்கு என்ன காரணம்..?: அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் குறித்த முடிவுகள் இன்னும் தெளிவாகாத நிலையிலும், அதிக விலையுள்ள தொழில்நுட்ப பங்குகளில் முதலீட்டாளர்களுக்கு கவலை ஏற்பட்டதாலும், சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற தொடங்கின. இதனால் கிரிப்டோ கரன்சிகளின் மீதான நம்பிக்கை குறைந்து, சந்தையின் ஒட்டுமொத்த பலவீனமான மனநிலையை பிரதிபலிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் பிட்காயின் மதிப்பு மட்டும் 12% வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு தொடக்கத்தில் அது ஈட்டிய லாபங்கள் அனைத்தும் நீங்கிவிட்டன. இந்த சரிவுக்கு முன்பு, கிரிப்டோவுக்கான சாதகமான உலகளாவிய சட்டதிட்டங்களால் பிட்காயின் விலை அக்டோபர் மாதத்தில் 120,000 டாலரை கடந்து உச்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இதுகுறித்து சந்தை ஆய்வாளர்கள் கூறுகையில், பிட்காயின் விலை 80,000 டாலருக்கு கீழே சரிந்தால், அது மிக மோசமான இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஐ.ஜி. (IG) சந்தை ஆய்வாளர் டோனி சைகாமோர் கூறுகையில், "இந்த சரிவு சந்தையின் ஒட்டுமொத்த அபாய உணர்வைக் காட்டினால், கிரிப்டோவின் நிலைமை மிகவும் மோசமாக மாறும்" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், சந்தை கண்காணிப்பு நிறுவனமான காயின்ஜெக்கோ கூறுகையில், கடந்த 6 வாரங்களில் அனைத்து கிரிப்டோகரன்சிகளின் மொத்த மதிப்பும் சுமார் 1.2 டிரில்லியன் அளவுக்கு குறைந்துள்ளது என்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.
நிறுவனங்கள் மீது நெருக்கடி: இந்த விலை சரிவு, தங்கள் நிறுவனத்தின் கையிருப்பில் அதிக அளவு பிட்காயினை வைத்திருக்கும் கிரிப்டோ கருவூல நிறுவனங்கள் மீது கடுமையான அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் ஆய்வின்படி, பிட்காயின் விலை 90,000 டாலருக்கு கீழே குறையும்போது, அந்த நிறுவனங்களின் வசம் உள்ள பாதி கிரிப்டோ சொத்துக்களின் மதிப்பு, அவை வாங்கிய விலையை விட குறைவாகி விடுகின்றன.
இந்த நெருக்கடியை சமாளிக்க, சில நிறுவனங்கள் நிதி திரட்டவோ அல்லது தங்கள் வசம் உள்ள பிட்காயின் பங்குகளை விற்கவோ நிர்பந்திக்கப்படலாம். இது மேலும் விலை சரிவை தூண்டும். முன்னணி நிதி ஆய்வாளர் பிரென்ட் டோனலி, கடந்த 2018 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் பிட்காயின் விலை 75% முதல் 80% வரை சரிந்ததை நினைவுபடுத்தியுள்ளார்.
அதேபோன்ற பெரும் சரிவு மீண்டும் நிகழ்ந்தால், பிட்காயின் விலை 25,000 டாலர் வரை குறைய வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளார். "நாம் இப்போது கிரிப்டோ குளிர் காலத்தில் இல்லை. ஆனால், இந்த சந்தையில் 80% சரிவுகள் இயல்பானது என்பதை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications