டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தனது முக்கிய வர்த்தக கூட்டாளி நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவீதம் என்ற அதிரடியான வரி விதிப்பை பிப்ரவரி 1ஆம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தியது. இந்த நடவடிக்கையின் எதிரொலி திங்கட்கிழமை முதல் முதலீட்டு சந்தையை அதிகளவில் பாதித்து வருகிறது.
ஆனால் பிப்ரவரி 1ஆம் தேதியில் இருந்து கிரிப்டோ சந்தை கடுமையாக பாதித்துள்ளது மட்டும் அல்லாமல் திங்கள்கிழமை வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சிக்குத் தள்ளியுள்ளது. பிட்காயின் இன்றைய வர்த்தகத்தில் மட்டும் கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்த விலைக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதேபோல், எதர் எனப்படும் எதிரியம் கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்ததை விட குறைந்த விலைக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இதனால் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு கிரிப்டோ சந்தைக்கு வந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது பெரும் இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
இன்றைய வர்த்தகத்தில் கிரிப்டோ உலகின் கிங்மேக்கராக இருக்கும் பிட்காயின் 91,242.89 டாலர் என 3 வார சரிவுக்கு சரிந்து, பின்பு 93,172.41 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. இதன் மூலம் பிட்காயின் மதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் 6 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளது.
இதேபோல் அதிகம் பயன்படுத்தும் கிரிப்டோ நெட்வொர்க் மற்றும் உலகின் 2வது பெரிய கிரிப்டோ காயினான எதிரியம் கிரிப்டோ மதிப்பு 30 சதவீதம் சரிந்து 2159.28 டாலருக்கு சரிந்துள்ளது. இவை அனைத்திற்கும் முக்கியமான காரணம் டாலர் மதிப்பு உயர்வது தான்.
ஜனவரி 20ஆம் தேதி பிட்காயின் வரலாறு காணாத உச்ச அளவான 107,071 டாலருக்கு உயர்ந்தது. டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றப்பெற்ற பின்னர் பிட்காயின் ஜனவரி 20 வரையில் மட்டும் சுமார் 40 சதவீதம் உயர்ந்தது. இந்த அதிரடிக்கு மத்தியில் தான் டிரம்ப் மற்றும் மெலினா பெயரில் டிரம்ப்-ன் சொந்த நிறுவனம் கிரிப்டோ-வை வெளியிட்டது.
டிரம்ப் பெயரில் வெளியான கிரிப்டோ 0.18 டாலருக்கு அறிமுகம் செய்யப்பட்டு, 75 டாலர் வரையில் ஜனவரி மாதம் உயர்ந்தது. ஆனால் 15 நாளில் 17.56 டாலராக குறைந்துள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 17.21 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் மெலினா டிரம்ப் கிரிப்டோ மதிப்பு அதன் அறிமுக விலையைக் காட்டிலும் 82.19 சதவீதம் குறைந்து தற்போது 1.43 டாலருக்கு குறைந்துள்ளது.
கடந்த வார இறுதியில், அமெரிக்க அரசு கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது புதிய வரி விதிப்புகளை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதையடுத்து, உலகளாவிய வர்த்தகப் போர் வெடிக்கும் அச்சம் தற்போது அதிகரித்துள்ளது. டிரம்ப்-ன் முதல் ஆட்சியில் அமெரிக்கா- சீனா மத்தியில் என்னவெல்லாம் நடந்தது என அனைவருக்கும் தெரியும்.
இதேபோன்ற நிலை தற்போது கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் மத்தியில் நடக்க உள்ளது. மேலும் சீனா உலக வர்த்தக அமைப்பில் (WTO) அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக சவால் விடுவதாக அறிவித்தது. இந்த நடவடிக்கைகள் வர்த்தகப் போரின் ஆரம்பம் என்றும் பொருளாதாரத்தின் மோசமான விளைவுகள் குறித்த அச்சத்தையும் முதலீட்டு சந்தையில் அதிகரித்தன.
இதனால் முதலீட்டாளர்கள் தங்கம், பங்குச்சந்தை, கிரிப்டோ என எதிலும் முதலீடு செய்யாமல் டாலர் மீதும், அரசு பத்திரங்கள் மீதும் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். இதன் வாயிலாகவே தற்போது இன்று பங்குச்சந்தை, தங்கம், கிரிப்டோ என மூன்றும் சரிந்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications