நிலைகுலைந்த கிரிப்டோ சந்தை.. 600 பில்லியன் டாலர் இழப்பிலும் லாபம் ஈட்டிய நாணயங்கள்..!!

உலக கிரிப்டோகரன்சி சந்தை வெள்ளிக்கிழமை (நேற்று) பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தை மதிப்பு 600 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் வீழ்ச்சியடைந்ததாக காயின்ஜெக்கோ (CoinGecko) தரவுகள் கூறுகின்றன. இந்த அதிரடி வீழ்ச்சி முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், சந்தையின் முன்னணி கிரிப்டோகரன்சிகளான பிட்காயின் (BTC), எத்தீரியம், எக்ஸ்ஆர்பி, சோலானா, டோஜ்காயின் உட்படப் பல முக்கிய நாணயங்கள் வெள்ளிக்கிழமை அன்று கடுமையாக வீழ்ச்சியை சந்தித்தன.

நிலைகுலைந்த கிரிப்டோ சந்தை.. 600 பில்லியன் டாலர் இழப்பிலும் லாபம் ஈட்டிய நாணயங்கள்..!!

முன்னதாக 1,10,000 டாலருக்கும் மேல் வர்த்தகமான பிட்காயின் விலை, 1,05,000 டாலர் என்ற குறியீட்டிற்குக் கீழே சரிந்தது. இது முதலீட்டாளர்களிடையே பீதியை உருவாக்கி, டிஜிட்டல் சொத்து சந்தை முழுவதும் பெரிய அளவில் விற்பனையை தூண்டியது.

பிட்காயினின் இந்த சரிவு, எத்தீரியம், சோலானா, அவலாஞ்சே போன்ற பிற முக்கிய ஆல்ட்காயின்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, அவை இரட்டை இலக்க இழப்புகளைப் பதிவு செய்தன. சந்தை விலைகள் அதலபாதாளத்திற்குச் சென்றதால், கடன் ஒப்பந்தங்களை பயன்படுத்திய வர்த்தகர்கள் மிக கடுமையான இழப்பைச் சந்தித்தனர்.

தரவு பகுப்பாய்வு கிரிப்டோ தளங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி, விலைகள் சில மணிநேரங்களில் கடுமையாக சரிந்தது. இதனால், பல மில்லியன் டாலர் மதிப்புள்ள நீண்டகால வர்த்தக நிலைகள், கடன் ஒப்பந்தங்கள் காரணமாக திடீரென முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த தொடர்ச்சியான விலை சரிவு, சந்தையில் விற்பனை அழுத்தத்தை அதிகரித்து, பிட்காயின் மற்றும் பிற முக்கிய டோக்கன்களின் விலையை மேலும் அதிகமாக கீழே தள்ளியது.

கிரிப்டோ சந்தையில் ஏற்பட்ட இந்த திடீர் வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். உலகளவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள், முதலீட்டாளர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி, பாதுகாப்பான முதலீடுகளை நோக்கிச் செல்லத் தூண்டுகிறது.

உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் இருந்து வரும் கடுமையான ஒழுங்குமுறை ஆய்வுகள் கிரிப்டோ சந்தையில் உள்ள அபாயங்கள் குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது. அதேபோல், உலகளாவிய நிதிச் சந்தைகளில் நிலவும் பொதுவான ஆபத்தை தவிர்ப்பதற்கான மனநிலை, கிரிப்டோ போன்ற அபாயகரமான சொத்துகளை முதலீட்டாளர்கள் தவிர்ப்பதற்குக் காரணமாகியுள்ளது.

மூலதன முதலீட்டாளர்களின் மனநிலை, கடந்த சில நாட்களில் ஏற்பட்ட சந்தை நிலைமைகளால், நம்பிக்கைல் இருந்து எச்சரிக்கையுடன் கூடிய நிலைக்குத் திரும்பியுள்ளது. குறிப்பாக, பிட்காயினின் ஆரம்ப கால முகவரிகளுடன் தொடர்புடைய வாலட்களில் ஏதோ வகையான இயக்கங்கள் இருந்ததாக வதந்திகள் பரவின.

இந்த முகவரிகள், பிட்காயின் உருவாக்கியவராக கருதப்படும் சதோஷி நகமோட்டோவுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் உருவானது. நீண்ட காலமாக இயக்கமில்லாமல் இருந்த இந்த பழைய வாலட்களில் உள்ள பிட்காயின்கள், விற்பனைக்காக கொண்டு வரப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. இந்த பயம், ஏற்கனவே பதட்டமாக இருந்த சந்தைக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தி, பிட்காயினின் விலையை மேலும் தாழ்த்தும் நிலை உருவாக்கியது.

பெரும்பாலான கிரிப்டோகரன்சிகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்த போதிலும், இந்தச் சரிவுக்கு மத்தியில் ஒரு சில கிரிப்டோகரன்சிகள் குறிப்பிடத்தக்க லாபத்தைப் பதிவு செய்துள்ளன. அந்த வகையில், TURBO BOME, BullRun Meme, DOGO, Black Phoenix, Rifampicin USD, Michi USD, PENGU AI ஆகிய கிரிப்டோகரன்சிகள் லாபத்தை பதிவு செய்துள்ளன. எனவே, இனி வரும் காலங்களில் முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடனும், சரியான ஆராய்ச்சியின் அடிப்படையிலும் தங்கள் முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+