கிரிப்டோ கரன்சிகள் எவ்வளவு வேகமாக வளர்ச்சி அடைந்ததோ தற்போது அதைவிட வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ கரன்சிகளுக்கு ஆதரவானவர் என்பதால் அதிலிருந்து கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு வேகமாக உயரத் தொடங்கியது. அது தவிர அமெரிக்க பங்குச்சந்தையில் கிரிப்டோ நாணயங்களுக்கான ஈடிஎஃப் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பும் அது சம்பந்தப்பட்ட பல்வேறு டோக்கன்களின் மதிப்பும் வேகமாக உயர்ந்தன.

டிரம்பின் வர்த்தக மோதல்களால் பங்குச்சந்தைகள் வீழ்ந்த நிலையில் பலரும் முதலீடுகளை கிரிப்டோ சந்தைகளின் பக்கம் திருப்பினர். இதனால் கடந்த ஆண்டு ஒரு பிட்காயின் மதிப்பு 1 லட்சம் டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடி ரூபாய்க்கும் மேல் உயர்ந்தது. ஆனால் கடந்த ஆண்டு மத்தியிலிருந்து கிரிப்டோ சந்தைகளுக்கு மிக மோசமான ஒரு காலமாக இருக்கிறது.
கிரிப்டோ தான் டிஜிட்டல் தங்கம் என்றெல்லாம் பலரும் கூறினர். ஆனால் கடந்த சில மாதங்களாக கிரிப்டோ சந்தைகளுக்கு மோசமான காலமாக இருக்கிறது. கிரிப்டோ சந்தை தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்த வண்ணம் இருக்கிறது. இதனால் கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்த பலரும் பல லட்சங்களை இழந்து கண்ணீர் வடிக்க தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக பிட்காயின் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை கரடியின் பிடியில் சிக்கி இருக்கிறது.
தொடர்ந்து நான்கு வாரங்களாக பிட்காயின் மதிப்பு ஏறவே இல்லை, மாறாக ஒவ்வொரு நாளும் புதிய சரிவினை கண்டு வருகிறது. ஒரு பிட்காயின் மதிப்பு 68,000 டாலர்களுக்கும் கீழ் சரிந்து விட்டது. நேற்று ஒரே நாளில் பிட்காயின் மதிப்பு 3 சதவீதத்திற்கு மேல் குறைந்துவிட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் 61 லட்சம் ரூபாய்க்கும் கீழ் சரிந்துவிட்டது. கிரிப்டோ சந்தையில் உள்ள 100 பிட் காயின் டோக்கன்களில் 85 டோக்கன்கள் பெரிய அளவில் நஷ்டத்தில் இருக்கின்றன.
பிட்காயின், எத்திரியம் என அனைத்து கிரிப்டோ நாணயங்களுமே அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டன. இதற்கிடையே பிட்காயின் மதிப்பு 55 ஆயிரம் டாலர்களுக்கும் கீழ் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் பிறகு மீண்டும் வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. 2018 க்கு பின்னர் தொடர்ந்து 120 நாட்களுக்கும் மேலாக பிட்காயின் மதிப்பு சரிவிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications