அமெரிக்க டாலர் மதிப்பு சரிவின் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தைப் பல பிரிவுகளில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இதன் வாயிலாகப் பிட்காயின் விலையும் தற்போது அதிகரிக்கத் துவங்கியுள்ளது. 2023 ஆம் ஆண்டின் மே மாதத்திலிருந்து பிட்காயின் நீண்ட கால வெற்றி பயணத்தைப் பதிவு செய்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு பிட்காயின் நீண்ட காலத்திற்குப் பின்பு 40000 டாலர் என்ற அளவீட்டை எட்டிய நிலையில் தற்போது 44,000 டாலர் அளவீட்டை கடந்துள்ளது. இந்தத் திடீர் உயர்வுக்கு முக்கியமான காரணம் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தனது பணவியல் கொள்கையில் பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைக்க முடியாத நிலையில் தான் உள்ளது என அறிவித்தது தானா எனக் கேள்வி எழுந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை வரையிலான ஆறு நாட்களுக்குப் பிட்காயின் விலை தோராயமாக 16% அதிகரித்துள்ளது. புதன்கிழமை ஆசிய சந்தை வர்த்தகத்தில் ஒரு பிட்காயின் விலை 43,713.54 டாலராக உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் பிட்காயின் விலை சுமார் 156.88 சதவீதம் அதிகரித்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு வரையில் சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரும் நிறுவன முதலீட்டாளர்கள், ஹெச்ட்ஜ் பண்ட் முதலீட்டாளர்கள் எனப் பல தரப்பினர்கள் தங்களுடைய மொத்த நிதி இருப்பில் பெரும் தொகையைக் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தனர்.
இதன் பிட்காயின், எதிரியம், ரிப்பிள், போல்காடாட் எனப் பிரபலமான அனைத்து கிரிப்டோகரன்சிகளும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. கடைசி அதிரடி வளர்ச்சி சுற்றில் கிரீன் எனர்ஜி பயன்படுத்தி உருவாக்கப்படும் கிரிப்டோகரன்சிகள் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்தது.
இதன் பின்பு எலான் மஸ்க் பிட்காயின் தயாரிப்பில் பயன்படுத்தும் மின்சாரம் பசுமையானது இல்லை, இதனால் கிரிப்டோகரன்சி ஒரு நிலைத்தன்மை உடைய கரன்சி இல்லை எனப் பேச துவங்கினார். இதேவேளையில் சீனாவில் காட்டுதீ போல உருவாகிய கிரிப்டோகரன்சி மைனிங் துறையை ஒட்டுமொத்தமாக முடக்கியது அந்நாட்டு அரசு.
இதோடு நிற்கவில்லை அமெரிக்க அரசு கிரிப்டோகரன்சி இணைக்கப்பட்ட ஈடிஎப் முதலீட்டுத் திட்டத்திற்கு அனுமதி வழங்க திட்டமிட்டு வரும் வேளையில், FTX நிறுவனத்தின் தலைவர்கள் முதலீட்டாளர்களின் பணத்தைத் திருடியது, அதன் பின்பு சாம் பேங்க்மேன் ப்ரைட் கைது, FTX திவாலானது.
சமீபத்தில் Binance தளத்தில் ஹமாஸ், அல் கொய்தா மற்றும் ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு உட்பட, அமெரிக்காவால் பயங்கரவாத குழுக்களாக அறிவிக்கப்பட்ட அமைப்புகளுடன் 100,000 க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து Binance அமெரிக்க அரசிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.
இதனால் உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளமான பைனன்ஸ் நிறுவனம் மொத்தமாக 4.3 பில்லியன் டாலர் அளவிலான அபராதம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் Binance நிறுவனத்தின் தலைவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.


Click it and Unblock the Notifications