இந்தியாவில் கிரிப்டோகரன்சியை கண்டாலே முதலீட்டாளர்கள் தெறித்து ஓடும் அளவுக்கு வரி விதிப்பும், கட்டுப்பாடுகளும் இருக்கும் வேளையில், சர்வதேச சந்தையில் எப்போதும் இல்லாத வேகதத்தில் பிட்காயின் விலை வரலாற்று சாதனையை படைத்துள்ளது. கிரிப்டோ சந்தையில் முடிசூடா மன்னாக இருக்கும் பிட்காயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் முதல் முறையாக 1 லட்சம் டாலரைத் தொட்டுள்ளது.
இதன் மூலம் பிட்காயின் சந்தை மதிப்பு மட்டும் 2 டிரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு, அமெரிக்க அதிபர் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப்-ம், அவர் நியமிக்கப்படும் புதிய தலைவர்களில் ஒருவருமான பால் அட்கின்ஸ் தான்.

பிட்காயின் விலை டொனால்டு டிரம்ப் வெற்றிப்பெற்ற நாளில் இருந்து உயர்வுடன் காணப்பட்டாலும், கடந்த ஒரு வாரத்தில் அதிரடியான
கிரிப்டோகரன்சி விலை உயர்வுக்கும், முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதற்கும் காரணம் அமெரிக்காவின் பங்குச் சந்தை கண்காணிப்பு ஆணையமான SEC இன் புதிய தலைவராக கிரிப்டோ ஆதரவாளரான பால் அட்கின்ஸ் நியமிக்கப்பட்டது தான் என முதலீட்டாளர்கள் அடித்து கூறுகின்றனர்.
பால் அட்கின்ஸ் தலைமையின் கீழ், பங்குச் சந்தை கண்காணிப்பு ஆணையம் அமெரிக்காவில் கிரிப்டோகரன்சிகளுக்கு அதிகப்படியான தளர்வான சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், அமெரிக்கா கிரிப்டோ முதலீடுகளுக்கு மிகவும் ஈர்க்கக்கூடிய சூழலாக மாறும், இதில் புதிய முதலீட்டு திட்டங்களுக்கான ஒப்புதல்கள் வழங்க கூடும் என எதிர்பார்க்கிறது. இதேபோல் அமெரிக்க முதலீட்டு சந்தையில் பால் அட்கின்ஸ் மிகப்பெரிய கிரிப்டோ ஆதாரவாளராக பார்க்கப்படுகிறார்.

இதன் வாயிலாகவே பிட்காயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் 8% அதிகரித்து 1,03,900.47 டாலர் வரையில் உயர்ந்து, இதன் சந்தை மதிப்பு 2.04 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது.
பிட்காயின் சந்தை மதிப்பை உலக நாடுகளின் ஜிடிபி உடன் ஒப்பிடும் போது, பல நாடுகளை பிட்காயின் மதிப்பை விட குறைவாக உள்ளது. இன்றைய நிலவரத்தில் மெக்ஸிகோ ($1.85 டிரில்லியன்), ஆஸ்திரேலியா ($1.8 டிரில்லியன்), ஸ்பெயின் ($1.73 டிரில்லியன்) ஆகிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக உள்ளது.
மேலும், ரஷ்யா ($2.18 டிரில்லியன்), பிரேசில் ($2.19 டிரில்லியன்), கனடா ($2.21 டிரில்லியன்) ஆகிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட பிட்காயின் வெறும் 0.15 டிரில்லியன் டாலர் குறைவாக உள்ளது.
இதேபோல் உலகின் அதிக மதிப்புடைய நிறுவனங்களை ஒப்பிடும் போது பிட்காயின் சந்தை மதிப்பு சவுதி அரம்கோ-வின் 1.796 டிரில்லியன் டாலர் மதிப்பை விட அதிகமா உள்ளது. இதேபோல் பேஸ்புக் ($1.549 டிரில்லியன்), எலோன் மஸ்க் தலைமையிலான டெஸ்லா ($1.148 டிரில்லியன்) ஆகியவற்றின் சந்தை மதிப்பையும் தாண்டி உலகின் 7வது பெரிய சொத்தாக மாறியுள்ளது பிட்காயின்.


Click it and Unblock the Notifications