சமீபத்தில் உலகின் 2வது பெரும் பொருளாதார நாடான சீனா கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கும், முதலீட்டுக்கும் தடை விதித்த நிலையில் பிட்காயின் உட்பட அனைத்து கிரிப்ரோகரன்சியும் அதிகளவிலான வர்த்தக சரிவை எதிர்கொண்டது.
இந்நிலையில் மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. உலகில் முதல் முறையாக ஒரு நாட்டின் அரசே பிட்காயினை நாணயமாக பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது கிரிப்டோகரன்சி சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
கிரிப்டோகரன்சி பிட்காயின்
உலகின் முன்னணி கிரிப்டோகரன்சியாக விளங்கும் பிட்காயின் மக்கள் அதிகம் விரும்பினாலும், அரசுகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் எல் சல்வடோர் இந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதிபர் Nayib Bukele
எல் சல்வடோர் நாட்டின் அதிபர் Nayib Bukele பிட்காயினை நாணயமாகப் பயன்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் எல் சல்வடோர் நாட்டின் நாடாளுமன்றத்தில் சுமார் 84 உறுப்பினர்களில் 62 பேர் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள காரணத்தால் எவ்விதமான தடையும் இல்லாமல் எளிதாக ஒப்புதல் பெற்றுள்ளது.
எல் சல்வடோர் நாட்டின் ஜிடிபி
அடுத்த 90 நாட்களில் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவிக்கும் அரசு ஆணை வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
மேலும் எல் சல்வடோர் நாட்டின் அதிபர் Nayib Bukele செய்த ஒரு டிவீட்டில் பிட்காயின் மொத்த சந்தை மதிப்பு 680 பில்லியன் டாலர், இதில் ஒரு சதவீதம் தொகை எல் சல்வடோர் நாட்டில் முதலீடு செய்யப்பட்டால் கூட நாட்டின் மொத்த ஜிடிபி அளவு 25 சதவீதம் வளர்ச்சி அடையும்.
1 கோடி வாடிக்கையாளர்கள் (மக்கள்)
எல் சல்வடோர் நாட்டில் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவிக்கப்பட்ட நிலையில் புதிதாக 1 கோடி வாடிக்கையாளர்கள் பிட்காயின் வர்த்தக சந்தைக்குள்ள நுழைந்துள்ளனர் என்றும் அதிபர் Nayib Bukele தெரிவித்துள்ளார்.
பிட்காயின் மதிப்பு
இதன் எதிரொலியாக பிட்காயின் மதிப்பு இன்று 4 சதவீதம் அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனால் 31,035.49 டாலராக இருந்த பிட்காயின் விலை தற்போது 34,541.26 டாலராக அதிகரித்துள்ளது. இன்றைய உயர்வின் மூலம் மொத்த பிட்காயின் மதிப்பு 640.17 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications