கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கும், கிரிப்டோ சந்தைக்கும் மிகப் பெரிய நம்பிக்கையாக இருந்த எல் சால்வடோர் நாடு, பிட்காயினை நாணய பரிமாற்றத்திற்குப் பயன்படுத்த முடியாமல் போன காரணத்தால் பிட்காயின் உட்பட அனைத்து முன்னணி கிரிப்டோ கரன்சியும் சரிவைச் சந்தித்துள்ளது.
பிட்காயின் மதிப்பு
பிட்காயின் மதிப்பு நேற்று 53,000 டாலரை நெருங்கி முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்த நிலையில் இன்று எல் சால்வடோர் நாட்டில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகப் பிட்காயின் மதிப்பு 17 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல் சால்வடோர் நாடு
எல் சால்வடோர் நாட்டில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அமெரிக்க டாலர் உடன் அதிகாரப்பூர்வ நாணயமாகப் பிட்காயினை நடைமுறைப்படுத்தியது அந்நாட்டு அரசு. இதற்காக எல் சால்வடோர் அரசு 400 பிட்காயினை வாங்கியுள்ளதாக அந்நாட்டின் அதிபர் Nayib Bukele அறிவித்தார்.
டிஜிட்டல் வேலெட் இயங்கவில்லை
ஆனால் செப்டம்பர் 7ஆம் தேதி பிட்காயின் நாணயமாகப் பயன்படுத்தும் டிஜிட்டல் வேலெட் இயங்கவில்லை என எல் சால்வடோர் நாட்டின் அதிபர் Nayib Bukele தெரிவித்தார். இதனால் மொத்த திட்டமும் முடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்தி கிரிப்டோ சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
இரு முக்கியக் காரணம்
எல் சால்வடோர் நாட்டின் இந்த முயற்சி நடைமுறைப்படுத்தும் காரணத்தாலும், நாணய சந்தை மோசமான வர்த்தகத்தைப் பதிவு செய்து வரும் காரணத்தாலும் கிரிப்டோகரன்சி சந்தையில் கடந்த சில வாரங்களாக அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
இதன் உச்சமாக நேற்றைய வர்த்தகத்தில் மட்டும் ஒரு பிட்காயின் மதிப்பு 50,577.41 டாலரில் இருந்து 52,912 டாலர் வரையில் உயர்ந்தது.
டிஜிட்டல் வேலெட் தோல்வி
ஆனால் இன்று பிட்காயின் நாணயமாகப் பயன்படுத்தும் டிஜிட்டல் வேலெட் இயங்கவில்லை என எல் சால்வடோர் நாட்டின் அதிபர் Nayib Bukele கூறிய பின்பு பிட்காயின் மதிப்பு யாரும் எதிர்பார்காத வகையில் 14.29 சதவீதம் வரையில் சரிந்தது.
பிட்காயின் மதிப்புச் சரிவு
இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 52,183.10 டாலர் அளவில் இருந்து 42.921.27 டாலர் வரையில் சரிந்துள்ளது. எல் சால்வடோர் நாட்டின் அறிவிப்பிற்குப் பின்பும் பிட்காயின் மதிப்புத் தடாலடியாகச் சரிந்துள்ளது கிரிப்டோ முதலீட்டாளர்கள் எல் சால்வடோர் நாட்டின் திட்டத்தின் மீதான நம்பிக்கையைக் காட்டுகிறது.
75 சதவீதம் வரையில் உயர்வு
ஜூலை மாத சரிவுக்குப் பின்பு பிட்காயின் மதிப்பு சுமார் 75 சதவீதம் வரையில் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களில் 17 சதவீதம் வரைவில் சரிந்துள்ளது. இந்தச் சரிவின் வாயிலாகப் பிட்காயின் மொத்த சந்தை மதிப்பு 300 பில்லியன் டாலர் வரையில் சரிந்துள்ளது எனக் காயின்கீக்கோ தெரிவித்துள்ளது.
பிற கிரிப்டோ கரன்சிகள்
பிட்காயினைத் தொடர்ந்து எதிரியம் தற்போது 9.91 சதவீதம் சரிந்து 3,374.41 டாலருக்கும், ரிப்பிள் 16.86 சதவீதம் சரிந்து 1.08 டாலருக்கும், கார்டானோ 10.57 சதவீதம் சரிந்து 2.35 டாருக்கும், ஸ்டெல்லார் 17.10 சதவீதம் சரிந்து 0.3219 டாலருக்கும், டோஜ்காயின் 13.97 சதவீதம் சரிந்து 0.24 டாலருக்கும், போல்காடாட் 17.58 சதவீதம் சரிந்து 27.22 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications