பிட்காயின் மதிப்பு 9% வீழ்ச்சி.. $33,000 அருகில் வர்த்தகம்.. எதர், டோஜ்காயினும் சரிவு..!

கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சரியத் தொடங்கிய பிறகு, பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இன்று மட்டும் 9% வீழ்ச்சி கண்டு, 33,075.23 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

இது கடந்த 24 மணி நேரத்தில் அதன் குறைந்தபட்ச விலையானது 32,211.14 டாலர்களாகும். இதே உச்சமானது 36,777.56 டாலர்களாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 13% ஏற்றத்திலும் காணப்படுகிறது.

எப்படியிருப்பினும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிவில் காணப்படுகின்றது.

Array

Array

இதே மற்றொரு டிஜிட்டல் நாணயமான எத்தேரியம் 7%ம் சரிவினைக் கண்டு, 2,595 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதே டோஜ்காயின் விலை 10% சரிவினைக் கண்டு, 0.33 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதே மற்ற XRP, லைட்காயின் உள்ளிட்ட நாணயங்களும் கடந்த 24 மணி நேரத்தில் 10% சரிவினைக் கண்டுள்ளது.

பிட்காயினில் இருந்து வெளியேற்றம்

பிட்காயினில் இருந்து வெளியேற்றம்

ஜூன் 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பிட்காயினில் இருந்து மட்டும், 141 மில்லியன் டாலர்கள் வெளியேறியுள்ளன. இதே கடந்த வாரத்தில் 94.2 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடு வெளியேறியுள்ளது. இது இந்த ஆண்டு காணப்பட்ட நிகர வருவாயில் 8.3% ஆகும். இதுவரை இந்த ஆண்டில் பிட்காயின் நிகர வருவாய் 4.2 பில்லியன் டாலர்களை காட்டியது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது பிட்காயினில் டிஜிட்டல் சொத்து மதிப்பு, வாராந்திர வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது 62% சரிவினைக் கண்டுள்ளது.

தொடர் சரிவு

தொடர் சரிவு


டெஸ்லா நிறுவனம் பிட்காயினை பேமெண்ட் ஆப்சனாக ஏற்ற கொள்ள முடியாது என்று எலான் மஸ்க் கூறிய பின்னர், பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக சீனாவும் தொடர்ந்து பிட்காயினுக்கு எதிரான அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது. இதுவும் பிட்காயின் விலைக்கு எதிராக அமைந்துள்ளது.

தொடர் சரிவில் பிட்காயின்

தொடர் சரிவில் பிட்காயின்

பிட்காயின் தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து சரிவில் இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் எலான் மஸ்கின் அறிவிப்புக்கு பிறகு தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+