பிட்காயின் முதலீடு என்பது பரவலாக உலகளவில் அதிகரித்து வரும் முதலீடுகளில் ஒன்றாகும். இதனால் பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து உச்சத்தினை தொட்டு வருகின்றது.
இது அமெரிக்காவின் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதம் பூஜ்ஜியத்துக்கு அருகிலேயே மாற்றாமல் வைத்துள்ள நிலையில், சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம், பிட்காயின் பக்கம் திரும்பியுள்ளது.
இதற்கிடையில் பல நிபுணர்களும் பிட்காயின் குறித்த சாதகமான அறிவிப்புகளை கொடுத்து வருகின்றனர்.
பிட்காயின் மதிப்பு
இந்த நிலையில் பிட்காயின் மதிப்பானது 3,00,000 லட்சம் டாலர்களை தொடலாம், ஆனால் அதற்கு முன்பு 90% வீழ்ச்சியடையலாம் என கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சின் நிறுவன ஒருவர் கூறியுள்ளார்.
இதே மற்றொரு நிபுணர் பிட்காயின் என்பது காளை சந்தை என்று கூறியுள்ளார். அதோடு மார்கன் ஸ்டான்லியும் பிட்காயினுக்கு ஆதாரவான கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், பிட்காயின் மதிப்பானது, தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இன்று என்ன நிலவரம்
பிட்காயின் மதிப்பானது இந்த ஆண்டு இருமடங்கு அதிகரித்துள்ளது. இது திங்கட்கிழமையன்று 58,000 டாலர்களுக்கும் மேலாக இருந்தது. இதே இன்று 54,017 டாலர்களாக உள்ளது. பிட்காயின் மதிப்பு முந்தைய ஆண்டின் மார்ச் மாதத்தில் இருந்து இது சுமார் 800% ஏற்றம் கண்டுள்ளது. இது உலகம் முழுக்க கொரோனாவின் பரவல் ஆரம்பமான நிலையில், பிட்காயினும் ஏற்றம் காண ஆரம்பித்தது.
சிறந்த ஹெட்ஜிங்
எனினும் கொரோனாவின் தாக்கம் எப்போது குறைய ஆரம்பித்ததோ? அப்போதில் இருந்து விலை குறைய ஆரம்பித்தது. எனினும் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி இந்த குறைவான வட்டி விகிதமானது 2023 வரையில் பூஜ்ஜியத்துக்கு அருகிலேயே இருக்கும் என்றும் கூறியது. அதோடு மார்கன் ஸ்டான்லி நிறுவனமும் பிட்காயினுக்கு ஆதரவாக கணிப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும் பணவீக்கத்திற்கு எதிரான ஹெட்ஜிங் ஆகவும் பிட்காயின் மாறி வருகின்றது. இதனால் முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
தடை ஏன்
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர். ஆனால் டிஜிட்டல் கரன்சியின் ஆதிக்கம் அதிகரித்தால் ஒரு நாட்டின் நாணய மதிப்பும், நாணயத்துக்கான அவசியமும் கேள்விக் குறியாகும் என பல நாடுகளும் நினைக்கின்றன. இதனால் தான் அவற்றை தடை செய்ய விரும்புகின்றன. மேலும் கிரிப்டோகரன்சியை எல்லா பரிவர்த்தனைகளிலும் எல்லா இடங்களிலும் செயல்படுத்த முடியும் என்ற நிலை வந்தால், நாணயத்துக்கான தேவை குறைய ஆரம்பிக்கும். இதனால் நாணயத்தின் மதிப்பும் குறைய வாய்ப்புண்டு.
More From GoodReturns

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்!! ரூ.1000 கூட முதலீடு செய்யலாம்!!

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications