பிட்காயின் முதலீடு என்பது இன்று பரவலாக உலகளவில் அதிகரித்து வரும் முதலீடுகளில் ஒன்றாக உள்ளது. இதற்கிடையில் பிட்காயின் மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் பிட்காயின் மதிப்பானது 4,00,000 டாலர்களை தொடலாம் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றது.
தற்போது உலகின் பல நாடுகளும் பிட்காயினை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், பல முன்னணி நிறுவனங்களும் பிட்காயினை பேமெண்ட்டுகளாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளன.
இதற்கிடையில் பிட்காயின் மதிப்பானது நிதானமாக ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.
பிட்காயின் குறித்த கணிப்பு
கடந்த 2013ல் பிட்காயின் மதிப்பானது சுமார் 55 மடங்கு அதிகரித்துள்ளது. இதே 2017ல் 15 மடங்கு என கூறப்படுகிறது. இதற்கிடையில் நடப்பு ஆண்டில் 4 லட்சம் டாலர்களை தொடலாம் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. சமீபத்திய காலத்தில் பிட்காயினில் ஏற்ற இறக்கம் என்பது வெகுவாகவே குறைந்துள்ளது.
ஏற்ற இறக்கம் குறைந்துள்ளது?
கடந்த ஏழு நாட்களில் மட்டும் இந்த டிஜிட்டல் நாணயத்தின் மதிப்பானது, 56,134.42 டாலர்கள் முதல், 59,060.03 டாலர்களுக்கும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. ஆக கடந்த சில மாதங்களுக்கு முன்புடன் ஒப்பிடும்போது ஏற்ற இறக்கம் குறைந்துள்ளது. சில ஆய்வறிக்கைகள் பிட்காயின் தங்கத்திற்கு மாற்றாக இருக்கலாம் என நம்புவதாக கூறியுள்ளனர்.
சிறந்த டிஜிட்டல் சொத்து
மேலும் பல ஆய்வறிக்கைகளும் தங்கத்தினை விட பிட்காயினுக்கு சாதகமாக வந்துள்ளது. இன்று தங்கத்தின் விலை சுமாராக 1700 டாலர்களாக உள்ளது. ஆனால் பிட்காயின் 50,000 டாலர்களுக்கும் மேலாக உள்ளது. ஆக பிட்காயின் சிறந்த டிஜிட்டல் சொத்தாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஃபண்டமெண்டல் மற்றும் டெக்னிக்கலாக மோசமடையும்போது, வேகமான டிஜிட்டல் சொத்தாக பிட்காயின் பார்க்கப்படுகிறது.
பிட்காயின் நிலவரம்
உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான டெஸ்லா, அதன் செல்வத்தில் கணிசமான தொகையை பிட்காயினுக்கு ஒதுக்கியுள்ளது. ஆக இதுவும் பிட்காயினுக்கு சாதகமாக குறிகாட்டியாக பார்க்கலாம். மேலும் விசா, கோல்டுமேன் சாச்சஸ், மார்கன் ஸ்டான்லி உள்ளிட்ட நிறுவனங்கள் பிட்காயினை ஏற்றுக் கொண்டுள்ளன. இதற்கிடையில் தற்போது பிட்காயின் மதிப்பானது 57,945.90 டாலர்களாக உள்ளது.


Click it and Unblock the Notifications