$60,000 லெவலில் தடுமாறும் Bitcoin.. என்ன காரணம்?

பிட்காயின் முதலீடானது உலக முதலீட்டாளர்களை ஈர்த்து வரும் நிலையில், பலமான ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்தாலும், ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது நல்ல ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

அதிலும் கொரோனாவுக்கு பின்பு பிட்காயின் முதலீடு என்பது, உலகளவில் கவனிக்கதக்க முதலீடுகளில் ஒன்றாக மாறி வருகின்றது.

உதாரணத்திற்கு, கடந்த ஜனவரி 1, 2020ல் பிட்காயின் மதிப்பானது சுமார் 7,200 டாலர்களாக இருந்தத்து. டிசம்பர் 30, 2020 நிலவரப்படி, 29000 டாலர்கள் என்ற லெவலில் இருந்தது. கிட்டதட்ட ஒரு ஆண்டில் மூன்று மடங்காக அதிகரித்தது. இது சுமார் 45% ஆகும்.

வரலாற்று உச்சம்

வரலாற்று உச்சம்

கடந்த ஆண்டில் தான் இப்படி எனில், நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சுறுசுறுப்பான முதலீடுகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. கடந்த மார்ச் 13 அன்றும் அதன் வரலாற்று உச்சமான 61,711.87 டாலர்களை தொட்டது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களிலேயே பலத்த சரிவினைக் கண்டு 55,800 டாலர்கள் என்ற லெவலை தொட்டது.

கடந்த 4 அமர்வுகளில் லாபம்

கடந்த 4 அமர்வுகளில் லாபம்

இது புராபிட் புக்கிங் காரனமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஏற்றம் காணத்தொடங்கியுள்ள நிலையில், கடந்த 4 அமர்வுகளில் மட்டும் 8% அதிகமான லாபத்தினை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்த நிலையில், குறைவான வால்யூம் காரணமாக பிட்காயின் 60,000 என்ற லெவலில் இருந்தும் மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. தற்போது 58,792 டாலர்களாகவும் காணப்படுகிறது.

சந்தை மதிப்பு சரிவு

சந்தை மதிப்பு சரிவு

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிட்காயின் சந்தை மதிப்பானது 75 குறைந்து, 55.93 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று 59,000 டாலர்கள் என்ற லெவலில் வர்த்தகமாகி பிட்காயின் மதிப்பானது, அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தினை பூஜ்ஜியத்துக்கு அருகிலும், மார்கன் ஸ்டான்லி கிரிப்டோகரன்சிக்கு ஆதரவாக, தனது வாடிக்கையாளர்களிடம் பிட்காயின் நாணயங்களை ஏற்றுக் கொள்ளலாம் என்ற சலுகையை அறிவித்துள்ளது.

முதலீட்டாளர்கள் ஆர்வம்

முதலீட்டாளர்கள் ஆர்வம்

இதனால் பணவீக்கம் பற்றிய கவலைகளும் எழுந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பிட்காயினில் முதலீடுகளை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
அதோடு பல சர்வதேச நிறுவனங்களும் பிட்காயினுக்கு ஆதரவாக மாறி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் பெரும் முதலீட்டாளர்கள் பிட்காயினில் முதலீடு செய்து வருகின்றனர். குறிப்பாக சர்வதேச பொருளாதாரம் சமீபத்திய நாட்களில் மீண்டு வருவதாக, வெளியாகி வரும் நேர்மறையான கருத்துகளும் பிட்காயின் ஏற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. ஆக ஃபண்டமெண்டல் காரணிகள் அனைத்தும் பிட்காயினுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் அதன் விலையானது தாறுமாறான ஏற்றத்தினை கண்டு வருகின்றது.

தொடர்ச்சியாக முதலீடுகள் அதிகரிப்பு

தொடர்ச்சியாக முதலீடுகள் அதிகரிப்பு

அதோடு சர்வதேச கார்ப்பரேட் முதலீட்டாளர்களும், தொடர்ச்சியான புதிய போட்டிகளையும் நாங்கள் காண்கிறோம். குறிப்பாக டெஸ்லா, ஜேபி மார்கன், மைக்ரோ ஸ்ட்ராடஜி மற்றும் பிளாக்ராக் போன்ற முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து வலுவான ஆதரவு இருந்து வருகின்றது என CoinDCX-ன் தலைமை செயல் அதிகாரி சுமித் குப்தா கூறியுள்ளார்.

இந்த லெவலை தொடலாம்

இந்த லெவலை தொடலாம்

இதற்கிடையில் தற்போதைய லெவலில் இருந்து, பிட்காயின் மதிப்பானது அடுத்த மாதத்தில் 75,000 டாலர்களை தொடலாம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் சர்வதேச அளவில் முதலீட்டாளர்களின் கவனத்தினை பிட்காயின் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இதனால் தொடர்ச்சியாக கடந்த ஆண்டில் இருந்தே உச்சம் தொட்டு வருகின்றது. குறிப்பாக அமெரிக்க நிறுவனங்களும், முதலீட்டு நிறுவனங்களும், தொடர்ந்து பிட்காயினில் தங்களது முதலீடுகளை செய்ய ஆர்வம் காட்டி வருவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் பிட்காயின் விலையானது அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+