மீண்டும் $59,000 தொட்ட பிட்காயின்.. லாபத்தினை அள்ளும் முதலீட்டாளர்கள்..!

பிட்காயின் முதலீடு என்பது தற்போது பரவலாக உலகளவில் அதிகரித்து வருகின்றது. இதனால் பிட்காயின் மதிப்பானது மீண்டும் தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றது.

இது அமெரிக்காவின் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதம் பூஜ்ஜியத்துக்கு அருகிலேயே மாற்றாமல் வைத்துள்ளது. அதோடு மார்கன் ஸ்டான்லியும் பிட்காயினுக்கு ஆதாரவான கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் பிட்காயின் மதிப்பான புதிய உச்சம் தொட்டு வருகின்றது.

இதற்கிடையில் வியாழக்கிழமை நிலவரப்படி, பிட்காயின் மதிப்பானது 59,000 டாலர்கள் என்ற லெவலை தொட்டுள்ளது. குறிப்பாக தற்போது 58,461.39 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

பிட்காயினில் அதிகரிக்கும் முதலீடு

பிட்காயினில் அதிகரிக்கும் முதலீடு

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது இந்த குறைவான வட்டி விகிதமானது 2023 வரையில் பூஜ்ஜியத்துக்கு அருகிலேயே இருக்கும் என்றும் கூறியுள்ளது. அதோடு மார்கன் ஸ்டான்லி நிறுவனமும் பிட்காயினுக்கு அவ்வபோது ஆதரவாக கணிப்புகளை வெளியிட்டு வருகின்றது. இதனால் பணவீக்கம் பற்றிய கவலைகளும் எழுந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பிட்காயினில் முதலீடுகளை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

அதோடு பல சர்வதேச நிறுவனங்களும் பிட்காயினுக்கு ஆதரவாக மாறி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் பெரும் முதலீட்டாளர்கள் பிட்காயினில் முதலீடு செய்து வருகின்றனர். குறிப்பாக சர்வதேச பொருளாதாரம் சமீபத்திய நாட்களில் மீண்டு வருவதாக, வெளியாகி வரும் நேர்மறையான கருத்துகளும் பிட்காயின் ஏற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.

பிட்காயினுக்கு ஆதரவளிக்கும் மார்கன் ஸ்டான்லி

பிட்காயினுக்கு ஆதரவளிக்கும் மார்கன் ஸ்டான்லி

குறிப்பாக அமெரிக்காவின் முதலீட்டு வங்கியான மார்கன் ஸ்டான்லி, தனது வாடிக்கையாளர்களிடம் பிட்காயின் நாணயங்களை ஏற்றுக் கொள்ளலாம் என்ற சலுகையை அறிவித்துள்ளது. 4 டிரில்லியன் டாலர் மதிப்பிலான அசெட் மேனேஜர், பிட்காயின் முதலீட்டினை ஏற்றுக் கொள்ள தயாராகியுள்ளது எனலாம்.

அடுத்த மாதத்தில் மீண்டும் உச்சம் தொடலாம்

அடுத்த மாதத்தில் மீண்டும் உச்சம் தொடலாம்

கடந்த வாரத்தில் புராபிட் புக்கிங் காரணமாக, வரலாற்று உச்சத்திற்கு காரணமாக இந்த டிஜிட்டல் கரன்சியானது 54000 டாலர்களை தொட்டது. இதற்கிடையில் தற்போதைய லெவலில் பிட்காயின் மதிப்பானது அடுத்த மாதத்தில் 75,000 டாலர்களை தொடலாம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். வரவிருக்கும் மாதத்தில் பிட்காயின் குறித்த தெளிவான அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்களை ஈர்ப்பு

முதலீட்டாளர்களை ஈர்ப்பு

சர்வதேச அளவில் முதலீட்டாளர்களின் கவனத்தினை பிட்காயின் ஈர்த்து வருகிறது. இதனால் தொடர்ச்சியாக கடந்த ஆண்டில் இருந்தே உச்சம் தொட்டு வருகின்றது. குறிப்பாக அமெரிக்க நிறுவனங்களும், முதலீட்டு நிறுவனங்களும், தொடர்ந்து பிட்காயினில் தங்களது முதலீடுகளை செய்ய ஆர்வம் காட்டி வருவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் பிட்காயின் விலையானது அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+