பிட்காயின் முதலீடு என்பது பரவலாக உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் வரலாற்று உச்சத்தினை எட்டியுள்ளது.
காயினை அடிப்படையாகக் கொண்ட ஐபிஓ அமெரிக்க சந்தையில் பட்டியலிடப்படும் நிலையில், பிட்காயின் மதிப்பானது மீண்டும் வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் தற்போது 63,962 டாலர்களை தொட்டு மீண்டும் புதிய உச்சத்தில் வர்த்தகமாகி வருகின்றது.
தொடர்ந்து அமெரிக்க முதலீட்டாளர்கள் பிட்காயினில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இதன் மதிப்பானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. பிட்காயின் குறித்து எதிர்மறையான கருத்துகள் என்பது நிலவி வந்தாலும், டெஸ்லா உள்ளிட்ட மிகப்பெரிய மிகப்பெரிய நிறுவனங்கள் கூட இந்த டிஜிட்டல் நாணயத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாக நாளுக்கு நாள் பல நிறுவனங்களும், பிட்காயினை தங்களது பேமெண்ட் ஆப்சனாகவும் ஏற்றும் கொள்ள ஆரம்பித்துள்ளன.
இதற்கிடையில் ஏப்ரல் 14 அன்று நாஸ்டாக்கில் 100 பில்லியன் டாலர் மதிப்பீட்டில், காயின்பேஸ் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கிடையில் மார்கன் ஸ்டான்லி, கோல்டுமேன் சாச்சஸ் உள்ளிட்ட முதலீட்டு வங்கிகளும் கூட, பிட்காயினுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
ஆக பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து உச்சத்தினை தொட்டு வருவதில் ஆச்சரியமில்லை என்றாலும், தொடர்ந்து பல நாடுகளில் அதிகரித்து வரும் ஆதரவுக்கு மத்தியில் இதன் மதிப்பானது இன்னும் அதிகரிக்கும் என்றே முதலீட்டாளர்கள் கூறி வருகின்றனர்.
அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது தொடர்ந்து குறைவான வட்டி விகிதமானது இன்னும் சில ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கும் என்றும் கூறி வருகின்றது. ஆக பணவீக்கத்திற்கு எதிரான ஹெட்ஜிங் ஆகவும் பிட்காயின் மாறி வருகின்றது. இதனால் முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

PPF Vs SIP: 10 வருஷத்துல யாரு கிங்? ரூ.1.5 லட்சத்தை எதில் போட்டால் கோடீஸ்வரர் ஆகலாம்?



Click it and Unblock the Notifications