கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சரியத் தொடங்கிய பிறகு, பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
அவ்வப்போது ஏற்றத்தினை கண்டாலும், மொத்தமாக பார்க்கும்போது சரிவிலேயே காணப்படுகிறது.
குறிப்பாக கடந்த 4 வர்த்தக அமர்வுகளாகவே பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.
பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத ஏற்றம்
சமீப காலமாக பிட்காயினுக்கு நேரம் சரியில்லை என்று தான் கூற வேண்டும். ஏனெனில் பிட்காயினுக்கு ஒரு கட்டத்தில் முழுக்க ஆதரவுக் கொடுத்து வந்தவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தான். ஆதரவு மட்டும் மல்ல, டெஸ்லா நிறுவனம் பிட்காயினில் முதலீடு செய்த பிறகு தான், பிட்காயின் மதிப்பானது வரலாறு காணாத ஏற்றத்தினை கண்டது.
தொடர் சரிவில் பிட்காயின்
இதனையடுத்து தான் பல அமெரிக்க நிறுவனங்கள் பிட்காயினை தங்களது பேமெண்ட் ஆப்சனாகவும் மாற்றின. டெஸ்லாவின் அறிவிப்புக்கு பிறகு பிட்காயினில் முதலீடுகளும் குவியத் தொடங்கின. இப்படி பலரையும் பிட்காயின் பக்கம் ஈர்த்தவற்றில் எலான் மஸ்கிற்கும் முக்கிய பங்கு உள்ளது என்றால் அது மறுப்பதற்கில்லை. எனினும் சமீப வாரங்களுக்கு முன்பு பிட்காயினை பேமெண்ட் ஆப்சனாக ஏற்ற கொள்ள முடியாது என்று எலான் மஸ்க் கூறிய பின்னர்., மீண்டும் பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
சீனாவும் எதிர்ப்பு
இதனை இன்னும் மெருகேற்றும் விதமாக சீனாவும் தொடர்ந்து பிட்காயினுக்கு எதிரான அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது. இதுவும் பிட்காயின் விலைக்கு எதிராக அமைந்துள்ளது. இதனால் பிட்காயின் விலையானது தொடர்ச்சியாக சரிவினையே கண்டு வருகின்றது.
தற்போதைய நிலவரம்
பிட்காயின் விலையானது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.54% அதிகரித்து, 36,524.38 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் அதன் குறைந்தபட்ச விலையானது 35,281.56 டாலர்களாகும். இதே உச்சமானது 36,819.23 டாலர்களாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 24% ஏற்றத்திலும் காணப்படுகிறது. இதே மற்றொரு நாணயமான எத்தேரியம் 4% ஏற்றம் கண்டு 2,800 டாலரகளாகவும் காணப்படுகிறது. இதே டோஜ்காயின் விலையானது 0.38 டாலர்களாகவும் காணப்படுகிறது.
எதிர்காலம் எப்படி?
இந்தியாவில் சமீபத்தில் ரிசர்வ் வங்கி, வங்கிகள் அனுமதி என்று மறுக்க கூடாது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு செல்லாது என்றும் கூறியது. இதனால் இனி இந்தியாவிலும் மேற்கண்ட கிரிப்டோகரன்சிகளில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும். இது நிஜ கரன்சிகளை விட அதிக மதிப்புள்ளவையாக இருந்தாலும், முதலீட்டாளர்கள் மத்தியில் நிலையற்ற முதலீடாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications