அமெரிக்கப் பத்திர முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் பங்குச்சந்தையில் மட்டும் அல்லாமல் கிரிப்டோ சந்தையிலும் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
கடந்த வாரம் முழுவதும் தொடர் சரிவில் இருந்து பிட்காயின் மதிப்பு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் மட்டும் 5.84 சதவீதம் வரையில் சரிந்து 43,418 டாலர் அளவில் குறைந்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் பிப்ரவரி 21ஆம் தேதி அடைந்த வரலாற்று உச்ச அளவான 58,354.14 டாலர் அளவில் இருந்து அடுத்த 7 நாட்களில் சுமார் 25.6 சதவீதம் சரிந்துள்ளது.
இதேவேளையில் பேங்க் ஆப் நியூயார்க் மெலன், பிளாக்ராக், மாஸ்டர்கார்டு, டெஸ்லா, மைக்ரோஸ்டார்டர்ஜி ஆகிய நிறுவனங்கள் கிரிப்டோகரன்சி மற்றும் பிட்காயின் முதலீட்டு ஆதரவு தெரிவித்த நிலையில் பிட்காயின் மதிப்பு தொடர் வளர்ச்சி அடைந்தது.
ஆனால் கடந்த வாரம் அமெரிக்கப் பத்திர சந்தையில் ஏற்பட்ட மாற்றம் பிட்காயின் மதிப்பு அதிகளவில் பாதித்தது. இந்நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பிட்காயின் மீது மீண்டும் முதலீடு அதிகரிக்கத் துவங்கியது.
இதன் எதிரொலியாக இன்று ஒரு நாளில் மட்டும் பிட்காயின் மதிப்பு கிட்டத்தட்ட 10 சதவீதம் அதிகரித்து 5,000 டாலர் அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் 43,119 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட பிட்காயின் இன்று அதிகப்படியாக 48,594.74 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications