தயக்கம் காட்டிய முதலீட்டாளர்கள்.. 1,00,000 டாலருக்கு கீழே சரிந்த பிட்காயின்.. என்ன காரணம்..?

உலகளவில் பல நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் பங்குச் சந்தை உற்சாகத்தால் கடந்த கோடைகாலத்தில் பெரும் ஏற்றம் கண்டிருந்த பிட்காயின், தற்போது தனது அத்தனை லாபத்தையும் இழந்து, முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகின் மிகப் பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயினின் மதிப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) நியூயார்க் வர்த்தகத்தில் 7.4% வரை சரிந்து, 96,794 டாலர் என்ற நிலையை எட்டியது. கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு பிட்காயின் 1,00,000 டாலர் என்ற முக்கியமான எல்லையை தாண்டி கீழே சரிந்தது இதுவே முதல்முறை. மேலும், ஒரு மாதத்திற்கு முன்பு பிட்காயின் அடைந்த உச்ச விலையில் இருந்து 20%-க்கும் அதிகமாக சரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து, எதர் (Ether) 15% சரிந்தது. பல சிறிய கிரிப்டோகரன்சிகளின் (Altcoins) மதிப்பு இந்த ஆண்டில் 50%-க்கும் மேல் குறைந்துள்ளது.

தயக்கம் காட்டிய முதலீட்டாளர்கள்.. 1,00,000 டாலருக்கு கீழே சரிந்த பிட்காயின்.. என்ன காரணம்..?

இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம், கடந்த அக்டோபர் மாதத்தில் நிகழ்ந்த மிகப் பெரிய 'லிக்விடேஷன்' (Liquidation) நிகழ்வுதான். அப்போது, பிட்காயின் அதிகரிக்கும் என்று பந்தயம் கட்டிய முதலீட்டாளர்களின் கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள வர்த்தக நிலைகள் பலவந்தமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. அந்தப் பேரழிவு தந்த உளவியல் தாக்கம், வர்த்தகர்களை இப்போதும் ஒதுங்கியே இருக்க செய்துள்ளது.

பிட்காயின் ஃபியூச்சர்ஸ் சந்தையில் முதலீடு செய்யப்படுள்ள தொகை, அந்த அக்டோபர் விபத்துக்கு முந்தைய நிலையை விட மிகவும் குறைவாகவே உள்ளது. வட்டி விகிதங்கள் முதலீட்டுக்கு சாதகமாக மாறினாலும், மீண்டும் சந்தைக்குள் நுழைய பெரும்பாலானோர் தயங்குகின்றனர். இதன் விளைவாக, இந்த ஆண்டு இதுவரை பிட்காயினின் ஒட்டுமொத்த வளர்ச்சி 10%-க்கும் குறைவாகவே உள்ளது. இது பங்குச் சந்தைகள் ஈட்டிய லாபத்தை விட குறைவாகும்.

கிரிப்டோ உலகில் நிலவும் இந்த விற்பனை மனநிலை, இந்த வாரத்தில் டெக்னாலஜி பங்குகளின் சரிவை பிரதிபலிக்கிறது. ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (AI) துறையைச் சேர்ந்த என்விடியா (Nvidia) மற்றும் பாலந்தீர் போன்ற நிறுவனங்களின் பங்குகள், அவற்றின் அதிக மதிப்பு குறித்த சந்தேகங்களால் சரிந்தன. ஊக வணிகத்தின் குறிகாட்டியாகப் பார்க்கப்படும் பிட்காயின், தற்போது மீண்டும் பங்குச் சந்தை உணர்வுகளுடன் சேர்ந்து சரிய தொடங்கியுள்ளது.

இந்த சரிவுக்கு மத்தியிலும், முதலீட்டாளர்கள் தங்களுடைய ஆபத்தை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். வரும் நவம்பர் மாத இறுதியில் காலாவதியாகும், 80,000 டாலர் ஸ்டிரைக் விலை கொண்ட 'புட் கான்ட்ராக்டுகளுக்கு' (Put Contracts) அதிக தேவை ஏற்பட்டிருப்பது, மேலும் விலை குறையக்கூடும் என்ற அச்சத்தை வர்த்தகர்கள் மத்தியில் காட்டுவதாக உள்ளது.

புதிய சவால்கள் : பிட்காயினுக்கு பல புதிய சவால்கள் காத்திருக்கின்றன. கிரிப்டோவை வர்த்தகம் செய்யும் எக்ஸ்சேஞ்ச்-வர்த்தக நிதிகளில் இருந்து (ETFs) முதலீடுகள் வெளியேறுவது, முக்கிய டிஜிட்டல் சொத்து நிறுவனங்கள் தங்கள் இருப்புக்களை விற்கக்கூடும் என்ற கவலையை ஏற்படுத்துகின்றன. சமீப மாதங்களில் ஸ்பாட் பிட்காயின் மற்றும் எதர் ஈடிஎஃப்கள் இரண்டில் இருந்தும் முதலீடுகள் வெளியேறி வருவது, முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்திருப்பதை காட்டுகிறது.

நீண்ட கால நோக்கில் சந்தை பலவீனமாகவே காணப்பட்டாலும், அக்டோபரில் ஏற்பட்ட பெரும் இழப்புகள், வர்த்தகர்கள் தொடர்ந்து குறுகிய விற்பனையில் ஈடுபடுவதை தடுத்துள்ளது. இதனால், சந்தை தற்போது சிறிய காலத்திற்கான லாபத்தை மட்டுமே மையமாக கொண்ட வர்த்தகத்தால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பிட்காயின் புதன்கிழமை ஆசிய வர்த்தகத்தின் ஆரம்பத்தில் 1.6% வரை உயர்ந்து, 1,01,130 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது, மற்ற கிரிப்டோக்களின் இழப்புகளையும் ஓரளவு குறைத்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+