இன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் கிரிப்டோகரன்சி முதலீடுகளில் ஒன்று பிட்காயின். அதிலும் தற்போது சர்வதேச சந்தையில் மிக பலராலும் விரும்பப்படும் முதலீடாக பிட்காயின் மாறி வருகிறது.
சமீபத்தில் தான் பிட்காயின் மதிப்பானது அதன் வரலாற்று உச்சத்தினை தொட்டது. இந்த நிலையில் இன்று மட்டும் 15.1% வீழ்ச்சியினை பதிவு செய்து, 51,707.51 டாலர்களாக சரிவினைக் கண்டுள்ளது.
இன்று சர்வதேச அளவில் பெரியளவில் பேசப்படும் முதலீடுகளில் ஒன்றான பிட்காயின், மதியம் 2.52 மணியளவில் 8.5% சரிந்து, 55,810.32 டாலர்களாக இருந்தது. அதன் பிறகு 15.1%மும் சரிவினைக் கண்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு புதிய உச்சம்
இதே சந்தையில் இரண்டாவது மிகப்பெரிய டிஜிட்டல் நாணயமான எத்தேரியம், கிட்டதட்ட 18% குறைந்துள்ளது. இது அமெரிக்க பத்திர லாபங்களின் யூகங்களுக்கு மத்தியில் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஏப்ரல் 14 அன்று பிட்காயின் மதிப்பானது 64,869.78 டாலர்களை எட்டியது.
வட்டி விகிதம் அதிகரிப்பு
கடந்த ஆண்டில் 800% அதிகமாக அதிகரித்த இந்த டிஜிட்டல் நாணயம், 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பினையும் எட்டியது. ஆக இது வளர்ந்து வரும் முதலீடுகளில் ஒன்றாகவும், பணம் செலுத்துவதற்கு ஒரு வழிமுறையாகவும் மாறி வருகின்றது. மேலும் பல நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை குறைவாகவே வைத்துள்ளன.
பணவீக்கம் அதிகரிக்கலாம்
குறிப்பாக அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது, இன்னும் சில ஆண்டுகளுக்கு வட்டி விகிதம் அப்படியே வைத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது. இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பிட்காயினில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கலாம்.
முதலீடாக ஏற்பு
BNY மெலன், டெஸ்லா இன்க், மாஸ்டர் கார்டு உள்ளிட்ட நிறுவனங்கள் பிட்காயினை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், முதலீடும் செய்துள்ளன. எலான் மஸ்க்கின் பிட்காயினில் 1.5 பில்லியன் டாலர் முதலீட்டினை செய்தார். இதனையடுத்து பிட்காயினை தங்களது பேமெண்ட்டாக ஏற்றுக் கொள்வதாகவும், இதனை பயன்படுத்தி தங்களது கார்களை வாங்கலாம் என அறிவித்தார். இதே போல மார்கன் ஸ்டான்லி போன்ற மிகப்பெரிய நிறுவனங்களும் பிட்காயினுக்கு ஆதரவை கொடுத்து வருககின்றன.
More From GoodReturns

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications