கிரிப்டோகரன்சி என்ற வார்த்தையினை அதிகளவில் சமீப காலமாக பேச வைத்த டிஜிட்டல் நாணயங்களில் ஒன்று பிட்காயின். இது அனுதினமும் இரட்டை இலக்கில் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது.
இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தான். ஒரு வகையில் அதன் வளர்ச்சிக்கு வித்திட்டவர் எனலாம்.
ஏனெனில் டெஸ்லா நிறுவனம் பிட்காயினில் முதலீடு செய்த பிறகு, கிரிப்டோகரன்சிகள் பற்றி அதிகம் பேசப்பட்டது. உலகின் பல பெரும் நிறுவனங்களும் முதலீடு செய்ய முன் வந்தன. நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்தது. ஆனால் கடந்த சில தினங்களாகவே நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இப்போது அனுதினமும் இரு இலக்கில் வீழ்ச்சியினை சந்தித்து வருகின்றது.
முதலீட்டாளர்கள் நம்பிக்கை
இன்று உலகம் முழுவதும் அதிகம் பேசப்படும் கிரிப்டோகரன்சி முதலீடுகளில் ஒன்று பிட்காயின். இது சர்வதேச சந்தையில் பலராலும் விரும்பப்படும் ஓரு முதலீடாக மாறியது. அதற்கு முக்கிய காரானம் டெஸ்லா தான். டெஸ்லாவின் முதலீட்டு பின்னர் தான் பிட்காயின் மதிப்பானது, அனுதினமும் உச்சம் தொட்டு வந்தது. டெஸ்லாவின் முதலீடு, முதலீட்டாளார்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையும் ஏற்படுத்தியது.
மொத்தமாக கைவிட்ட எலான் மஸ்க்
பிட்காயினுக்கு ஆதாரவாக இருந்த டெஸ்லா நிறுவனம் அதனை, தன்னுடைய எலக்ட்ரானிக் வாகனங்களை வாங்க பேமெண்ட் ஆப்சனாகவும் அறிவித்தது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தங்களது வாகன நிறுவனத்தில், பிட்காயினை பேமெண்டாக ஏற்கொள்வதை நிறுத்துவதாக மஸ்க் ட்விட்டர் மூலமாக அறிவித்தார். இதனையடுத்து பிட்காயின் மதிப்பானது தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகின்றது.
தற்போதைய நிலவரம்
பிட்காயின் விலையானது தற்போது கிட்டதட்ட 14% குறைந்து, 33,178 டாலர்களாக (இந்திய நேரப்படி 9.30 PM - COINDESK ) காணப்படுகிறது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த 24 மணி நேரத்தில் அதன் குறைந்தபட்ச விலையானது 32,727.31 டாலர்களாகும். இதே உச்சமானது 38,607.17 டாலர்களாகும். இன்றைய தொடக்க விலை 33,959.24 டாலர்களாகும். இன்றைய உச்ச விலை 33,965.27 டாலர்களாகவும் காணப்படுகிறது. இதுவே சந்தை சரிவதற்கான அறிகுறியாக இருந்துள்ளது. இதன் வரலாற்று உச்சம் 64,829.14 டாலர்களாகும்.
எதர் நிலவரம் என்ன?
இதே மற்றொரு நாணயமான எதர் 14% சரிவினைக் கண்டு, 1973.96 டாலர்களாகவும் காணப்படுகிறது. இது முந்தைய முடிவு விலையுடன் ஒப்பிடும்போது 322.35 டாலர்களை இழந்துள்ளது. பிட்காயின் மதிப்பானது கடந்த சில நாட்களாக தொடர் சரிவினைக் கண்டு வருகின்றது. எனினும் கடந்த ஆண்டில் இருந்து பார்க்கும்போது 250% ஏற்றத்திலும், நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து 15% மேலாகவும் ஏற்றத்திலும் தான் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications