இன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் முதலீடுகளில் பிட்காயினும் ஒன்று. அதிலும் தற்போது சர்வதேச சந்தையில் மிக பலராலும் விரும்பப்படும் முதலீடாக பிட்காயின் உருவெடுத்து வருகிறது.
சமீபத்தில் டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், பிட்காயினில் 1.5 பில்லியன் டாலர் முதலீட்டினை செய்தார். இதனையடுத்து பிட்காயின் பற்றி அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை கூறி வருகின்றார்.
பிட்காயின் அதிரடியாக ஏற்றம் கண்டு வரும் நிலையில், சரிவிலும் பலத்த வீழ்ச்சியினை கண்டு வருகிறது.

இந்த நிலையில் பிட்காயின் விலையானது செவ்வாய்க்கிழமையன்று 13.3% குறைந்து 46,951.51 டாலர்களாக குறைந்தது. இதற்கிடையில் டெஸ்லாவின் பங்கு விலையும் 3.3% சரிவினை கண்டு, 690.59 டாலர்களாக வீழ்ச்சி கண்டுள்ளது.
டெஸ்லாவின் பங்கு விலை வீழ்ச்சியானது, ARK போன இடிஎஃப்கள் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது. இது 4.90% வீழ்ச்சி கண்டும், இதே ARK Autonomous Technology & Robotics ETF 4.3% வீழ்ச்சி கண்டும் காணப்படுகிறது. ஏனெனில் இந்த இரண்டு ஃபண்டுகளும் கொண்டுள்ள முக்கிய பங்குகளில் டெஸ்லாவும் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications