கிரிப்டோகரன்சி என்ற வார்த்தையினை அதிகளவில் சமீப காலமாக பேச வைத்தவர், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தான். ஒரு வகையில் அதன் வளர்ச்சிக்கு வித்திட்டவர் என்று கூட கூறலாம்.
ஏனெனில் டெஸ்லா நிறுவனம் பிட்காயினில் முதலீடு செய்த பிறகு, கிரிப்டோகரன்சிகள் பற்றி உலகெங்கிலும் பரவலாக பேசப்பட்டது. உலகின் பல பெரும் நிறுவனங்களும் முதலீடு செய்ய முன் வந்தன. நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்தது.
ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இப்போது அனுதினமும் வீழ்ச்சியினை சந்தித்து வருகின்றது. கடந்த ஆறு நாட்களில் ஒரு நாள் மட்டுமே சற்று ஏற்றம் கண்ட நிலையில், 5 நாட்கள் வீழ்ச்சியினை மட்டுமே பதிவு செய்துள்ளது.
அனுதினமும் ஏற்றம்
இன்று உலகம் முழுவதும் மிக பரவலாக பேசப்படும் கிரிப்டோகரன்சி முதலீடுகளில் ஒன்று பிட்காயின். இது சர்வதேச சந்தையில் பலராலும் விரும்பப்படும் ஓரு முதலீடாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரானம் டெஸ்லா தான். டெஸ்லாவின் முதலீட்டு பின்னர் தான் பிட்காயின் மதிப்பானது, அனுதினமும் உச்சம் தொட்டு வந்தது. இது முதலீட்டாளார்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையும், உத்வேகத்தினையும் கொடுத்தது எனலாம்.
கைவிட்ட எலான் மஸ்க்
அடிக்கடி பிட்காயினுக்கு ஆதாரவாக பேசி வந்த எலான் மஸ்க், அதனை பற்றி அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஏதேனும் ட்வீட் செய்வதும் உண்டு. அப்படி தான் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தங்களது வாகன நிறுவனத்தில் பிட்காயினை பேமெண்டாக ஏற்கொள்வதை நிறுத்துவதாக ட்விட்டர் மூலமாக அறிவித்தார். இதனையடுத்து பிட்காயின் மதிப்பானது தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகின்றது.
தற்போதைய நிலவரம்
பிட்காயின் விலையானது தற்போது 21.50% குறைந்து, 33,007.10 டாலர்களாக (இந்திய நேரப்படி 6.44 PM - COINDESK ) காணப்படுகிறது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த 24 மணி நேரத்தில் அதன் குறைந்தபட்ச விலையானது 32,542.38 டாலர்களாகும். இதே உச்சமானது 38,251.46 டாலர்களாகும். இன்றைய தொடக்க விலையும் உச்ச விலையும் ஒன்றே. இதுவே சந்தை சரிவதற்கான அறிகுறியாக இருந்துள்ளது. இதன் வரலாற்று உச்சம் 64,829.14 டாலர்களாகும்.
கடும் விமர்சனம்
எலான் மஸ்கின் பிட்காயின் குறித்த அறிவிப்புக்கு பிறகு, இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தினை பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 37,000 டாலர், அதனையடுத்து 30,000 டாலர்களாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இதில் ஏற்கனவே 37000 டாலர்களை உடைத்து, 33,000 டாலர் லெவலில் உள்ளது. இனி அடுத்த டார்கெட் 30,000 டாலர் தான்.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications