அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து கிரிப்டோகரன்சி மார்க்கெட் தொடர்ந்து சாதனை படைத்து கொண்டே வருகிறது. அதிபர் டிரம்ப் தேர்தல் வெற்றி கிரிப்டோகரன்சி சந்தையில் நம்பிக்கையைத் தூண்டியுள்ளது. எனவே, இந்திய கிரிப்டோ ஆபரேட்டர்கள் முதலீட்டாளர் ஈடுபாட்டை அதிகரிக்க வியூகம் வகுக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், பிட்காயின் விலைகள் உயர்ந்து வருவதால், இந்திய எக்ஸ்சேஞ்-கள் இந்த ஏற்றமான சூழ்நிலையில் தங்கள் தளங்களை மேம்படுத்துவதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
டொனால்ட் டிரம்பின் சமீபத்திய தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கிரிப்டோகரன்சி சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தால் முதலீட்டாளர்களை ஈர்க்க இந்திய கிரிப்டோ ஆபரேட்டர்கள் தங்களை மேம்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவின் கிரிப்டோ சந்தை ஆனது இந்த புதிய ஏற்றம் காரணமாக பிட்காயின் விலைகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க உயர்வு மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் கிரிப்டோ சந்தை குறித்த சாதகமான கொள்கைகள் ஆகியவை சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்த கிரிப்டோ தொடர்பான விளம்பரங்கள், கிரிப்டோ சந்தையில் இந்திய முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்க பல எக்ஸ்சேஞ்ச்களின் மூலம் மீண்டும் வரத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து பிட்கெட் ஆராய்ச்சியின் தலைமை ஆய்வாளர் ரியான் லீ கூறுகையில், இந்த ஏற்றம் டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவில் கிரிப்டோகரன்சி சந்தையில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தை அடைவதாகவும், குறிப்பாக பிட்காயின் சிறப்பான எழுச்சி கண்டு வருவதாகவும் கூறினார்.
தற்போதைய பிட்காயின் சமீபத்தில் அதன் அனைத்து நேர உயர்வை காட்டிலும் $93,000 ஐத் தாண்டியது. இது பிட்காயின் ஈடிஎஃப் நிதிகள் மூலம் சுமார் $4 பில்லியன் நிகர வரவுகளால் ஏற்பட்டுள்ளது. இந்த வரவு, தினசரி சராசரியாக $800 மில்லியன்களாக உள்ளன. அதேபோல், ஒவ்வொரு நாளும் தோராயமாக 10,000 BTC வாங்கப்படுகின்றன.
நாஷ்வில் பிட்காயின் மாநாட்டில் டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கள், பிட்காயின் ஒரு அமெரிக்க இருப்புச் சொத்தாக மாறக்கூடும் என்றும் இது பிட்காயின் நிலையை உயர்த்தி கணிசமான உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கலாம் என்று லீ கூறினார். மேலும் இது இந்திய கிரிப்டோ பரிவர்த்தனைகள் பயனர்களை மீண்டும் ஈடுபடுத்துவதற்கு இந்த ஏற்றத்தை பயன்படுத்துகின்றன என்று அவர் குறிப்பிடுகிறார்.
இந்த முன்னேற்றமான போக்கு இந்தியாவில் கிரிப்டோ பயனர்களை மீண்டும் ஈடுபடுத்த இந்திய எக்ஸ்சேஞ்ச்-கள் முயற்சித்து வருவதாகவும், பணப்புழக்கம் மற்றும் சாதகமான கிரிப்டோ கொள்கைகளில் புதிய நிர்வாகத்தின் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றத்தின் விளைவாக உள்நாட்டு தளங்கள் இந்த முன்னேற்றங்களைப் பயன்படுத்திக் கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், அவற்றின் தளங்களை மேம்படுத்துவதன் மூலமும், இந்திய எக்ஸ்சேஞ்ச்-கள் ஏற்றமான சந்தை போக்கை பயன்படுத்தி பயனர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்
டெசோஸ் இந்தியாவின் தலைவரும் நிறுவனருமான ஓம் மால்வியா கூறுகையில், கிரிப்டோ துறையில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்தால் புதுமையான தயாரிப்புகள் வளர உதவுவதிலும், பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதிலும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம் என்று கூறினார். மேலும், அமெரிக்காவில் உள்ள ஒழுங்குமுறை தெளிவு இந்தியாவில் இதேபோன்ற முன்னேற்றங்களை ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். டெவலப்பர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த வளர்ந்து வரும் சந்தைகளில் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் போது தைரியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான நம்பிக்கையைக் காண்பார்கள் என்றும் கூறினார்.
உலகளவில் கிரிப்டோகரன்சிகள் வலுவான ஏற்றத்தை கண்டு வருகின்றன. இது டிரம்பின் ஆலோசகராக எலான் மஸ்க் உள்ளதால் பிட்காயின் மற்றும் டோஜ்காயின்கள் இரண்டும் அதிக புள்ளிகளை பெற்று வருகின்றன. இந்தியாவின் தற்போதைய வரி மற்றும் ஒழுங்குமுறை தடைகள் இருந்தபோதிலும், டிரம்பின் கிரிப்டோ கொள்கைகள் இந்திய ஒழுங்குமுறை அணுகுமுறைகளையும் பாதிக்கலாம். மேலும் டிஜிட்டல் சொத்துக்களுக்கு மிகவும் வரவேற்கத்தக்க சூழலை உருவாக்கலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
அடுத்த மாதத்தில் பிட்காயின் விலைகள் $82,000 முதல் $110,000 வரை மாறுபடலாம் என்று கூறப்படுகிறது. இது சாதகமான அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் ஏறுமுகமான சந்தை நிலைமைகள் இந்திய கிரிப்டோ எக்ஸ்சேஞ்-கள் தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் பெறவும் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications