டொனால்ட் டிரம்பின் சமூக ஊடக நிறுவனம் கிரிப்டோ வர்த்தக தளமான Bakkt-ஐ வாங்குவதற்கான தகவல் வெளியானதை தொடர்ந்து, முன்னணி கிரிப்டோகரன்சியான பிட்காயின் 94,000 டாலரைத் தாண்டி இதுவரை இல்லாத அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. Truth Social நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் டிரம்ப் மீடியா மற்றும் டெக்னாலஜி குரூப், NYSE-உரிமையாளர் இண்டர்காண்டினென்டல் எக்ஸ்சேஞ்ச் முதலீட்டில் இயங்கும் Bakkt இன் பங்குகள் கையகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப் சமூக ஊடக நிறுவனம் டிரம்ப் மீடியா மற்றும் டெக்னாலஜி குரூப் , கிரிப்டோ வர்த்தக நிறுவனமான Bakkt ஐ வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதும், டிரம்ப் ஆட்சி 2025 ஆம் ஆண்டு முதல் துவங்க உள்ள நிலையிலும் கிரிப்டோகரன்சி மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால், பிட்காயின் $94,000 க்கு மேல் உயர்ந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியான பிட்காயின் மதிப்பு இந்த ஆண்டு இருமடங்காக அதிகரித்துள்ளது. இது கடைசி வர்த்தக நேர முடிவில் $94,078 என்ற சாதனையை எட்டியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள IG இன் சந்தை ஆய்வாளரான டோனி சைகாமோர் கூறுகையில், டிரம்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த கையப்படுத்தல் ஒப்பந்தம் மற்றும் பிளாக்ராக்கின் பிட்காயின் இடிஎஃப் மூலம் நாஸ்டாக்கில், முதல் நாள் விருப்ப வர்த்தகத்தைப் பயன்படுத்தி வர்த்தகர்கள் பிட்காயின் மீது முதலீடு செய்வதால் சாதனை உயர்வை எட்டியுள்ளதாக கூறினார்.
அதேபோல், நவம்பர் 5 அமெரிக்கத் தேர்தலுக்குப் பிறகு தொடர்ந்து கிரிப்டோகரன்சிகள் உயர்ந்து வருகின்றன. இது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான ஓன்று, கிரிப்டோ சந்தை மீது குறைவான கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்படும் என கூறியிருந்த நிலையில், விரைவில் இது நினைவாக உள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களுக்குப் பிட்காயின் மதிப்பு பெரிய அளவில் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
தற்போதைய கிரிப்டோகரன்சிகள் மீதான முதலீட்டு ஆர்வம், உலகளாவிய கிரிப்டோகரன்சி சந்தையின் மதிப்பை 3 டிரில்லியன் டாலருக்கு மேல் கொண்டு சென்றது. இது பகுப்பாய்வு மற்றும் தரவுத் தொகுப்பான CoinGecko அறிக்கையின்படி அதிகபட்ச சாதனையாக உள்ளது.


Click it and Unblock the Notifications