கிரிப்டோ மார்கெட்டில் முன்னணி காயினான பிட்காயின் (BTC) தற்போது சுமார் 70,000 டாலர்கள் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில் ஏற்பட்டுள்ள நம்பிக்கை காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிட்காயின் ஆனது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவை பெற்றுள்ளது. இதனால் பிட்காயின் ஏற்றத்தை வைத்து பார்க்கும்போது அவர் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய 24 மணி நேர நிலவரப்படி, கிரிப்டோகரன்சி மார்க்கெட்டை பொருத்துவரை ஏற்ற இறக்கமான சூழ்நிலைகளே நிலவின. பிட்காயின் சுமார் 67,400 டாலர்களாக ஏற்றத்தில் முடிந்தது. அதே சமயம் எதிரியம் (ETH) 2,600 டாலர்களுடன் ஏற்றத்தில் முடிந்தன. சோலனா (SOL) மற்றும் ஷிபா இனு ஆகியோர் கடந்த 24 மணிநேரத்தில் லேசான சரிவை சந்தித்தன.

மற்ற முக்கிய கிரிப்டோகரன்சிகளில், BNB, XRP, Dogecoin மற்றும் Tron ஆகியவை 4% வரை அதிகரித்தன. மறுபுறம் சோலானா, டோன்காயின், கார்டானோ, அவலாஞ்சி, போல்கடோட் மற்றும் ஷிபா இனு ஆகியவை 2.5% வரை சரிந்தன.
கிரிப்டோ சந்தையானது கடந்த மார்ச் மாதத்தில் எட்டப்பட்ட சாதனை உச்சங்களை மீண்டும் தொடர்வதால் கடந்த வாரம் முதல் பிட்காயின் லாபத்தை அதிகரித்தது. இது அபாயகரமான சொத்துக்கள் மற்றும் வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களைச் சுற்றி நம்பிக்கை உருவாக்குகிறது.
கிரிப்டோ சந்தை ஆய்வாளர்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியில் சமீபத்திய நாட்களில் ஊக்க நடவடிக்கைகளை வழங்கி வரும் சீனா உட்பட, உலகளாவிய பணப்புழக்கத்தின் உயர்வை மேற்கோள் காட்டியுள்ளனர். இது பிட்காயின் மற்றும் கிரிப்டோ சந்தைகளுக்கு சாதகமாக உள்ளது.
உலகளாவிய பணப்புழக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள ரிசர்வ் வங்கிகள் குறைந்த மூலதனத்துடன் தங்கள் பொருளாதாரத்தை வைத்துள்ளனர் என்று பிளாக்ஃபோர்ஸ் கேபிடல் கூறியது. இது கடந்த காலத்தில் உலகளாவிய பணப்புழக்கம் அதன் நகரும் சராசரியை விட அதிகமாக இருந்தபோது, அது பெரும்பாலும் பிட்காயின் விலையில் குறிப்பிடத்தக்க மேல்நோக்கிய நகர்வுகளை செய்து வருவதாக கூறியுள்ளது. அதேபோல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் பிட்காயின் 70000 டாலர்களை நெருங்கி வருகிறது. விரைவில் சாதனை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிப்டோகரன்சி துறையில் இருந்து பல ஆண்டுகளாக வந்த புகார்களை தொடர்ந்து கிரிப்டோகரன்சிகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை ஆதரிப்பதாக அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இந்த வாரம் உறுதியளித்திருப்பது மேலும் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications