2020ஆம் ஆண்டில் மக்கள் பல மோசமான மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், லாக்டவுன் கட்டுப்பாடுகள் முதலீட்டுச் சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது கொரோனா தொற்று.
கொரோனா பாதிப்பில் சிக்காமல் 2020ல் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது கிரிப்டோகரன்சி. உலகில் பல நாடுகளில் கிரிப்டோகரன்சி மீது தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் கிரிப்டோகரன்சி மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கிரிப்டோகரன்சி முதலீடுகள்
கொரோனா பாதிப்பின் காரணமாக முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்ட அதிரடி பாதிப்புகளில் முக்கிய முதலீட்டுத் தளமாக மாறியது கிரிப்டோகரன்சி. இந்தக் கொரோனா காலத்தில் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்த பல தனியார் முதலீட்டு நிறுவனங்கள், நிறுவனப் பங்கு முதலீட்டாளர்கள், பென்ஷன் பண்ட் முதலீட்டாளர்கள், டெக் முதலீட்டாளர்கள் மத்தியில் கிரிப்டோகரன்சி முக்கிய முதலீடாக மாறியுள்ளது.
பிட்காயின் மீது முதலீடு
கிரிப்டோகரன்சி மீது பல கட்டுப்பாடுகள், தடைகள் இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் மிகவும் பாதுகாப்பான மற்றும் அதிக நம்பகத்தன்மை கொண்ட பங்குகளில் முதலீடு செய்யப்பட்ட தனியார் முதலீட்டாளர்கள் பிட்காயின்-ஐ குறிவைத்து இதன் மீது மட்டும் அதிகளவிலான முதலீட்டைச் செய்தனர்.
அதிரடி வளர்ச்சி
இதன் வாயிலாகக் கொரோனா பாதிப்புகளும் தொற்றின் ஆரம்பக்கட்டமான ஜனவரி மாதம் 1ஆம் தேதி வெறும் 7,100 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் இன்று 18,051.48 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் பிட்காயின் அதிகப்படியாக 19,464 டாலரை அடைந்து, இது பிட்காயினின் வரலாற்று உச்ச அளவீடான 19,920 டாலருக்கும் மிகவும் நெருக்கமான விலை.
டிசம்பரில் வீழ்ச்சி
டிசம்பர் முதல் வார வர்த்தகச் சூழ்நிலையில் கண்டு கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் அடுத்தச் சில நாட்களுக்குள் பிட்காயின் அதன் வரலாற்று உச்ச விலையான 19,920 டாலரைத் தாண்டி 20000 டாலரைத் தொடும் என முதலீட்டாளர்கள் எதிர் பார்த்த நிலையில் சரிவு பாதை துவங்கியது.
6 நாள் தொடர் சரிவு
டிசம்பர் மாதம் 2ஆம் தேதி பிட்காயின் மதிப்பு 19,464 டாலரை அடைந்த நிலையில் கடந்த 6 நாட்களாகத் தொடர் சரிவு பாதையில் உள்ளது, இதன் வாயிலாக இன்று 18,051.48 டாலர் வரையிலும், டிசம்பர் 9ஆம் தேதி வர்த்தகத்தில் 17,836 டாலர் வரையில் சரிந்தது.
2020ல் பிட்காயின் மீதான முதலீட்டில் இன்றைய விலை நிலைக்குச் சுமார் 152.79 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து
கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டின் மக்களுக்குச் செலுத்த துவங்கிய பின்பு பிட்காயின் மதிப்பு அதிகளவில் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications