கிரிப்டோ கரன்சிகளில் பிரதானமாக இருக்கும் பிட்காயின்களின் மதிப்பு திடீரென 25 சதவீதம் வரை சரிந்துள்ளது. பலரும் பிட்காயின்களை அதிகளவில் விற்பனை செய்வதே இதற்கு முக்கிய காரணமாகும்.
சர்வதேச அளவில் கிரிப்டோ கரன்சி என்றாலே நம் அனைவருக்கும் பிட்காயின்கள் தான் நினைவுக்கு வரும். கடந்த 6 மாதங்களாக பிட்காயின்களின் மதிப்பு அதிகரித்து அடிக்கடி செய்திகளில் தலைப்பு செய்தியானது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதால் பிட்காயின்களின் மவுசு இன்னும் உயர்ந்தது. டிரம்ப் கிரிப்டோ கரன்சிகளுக்கு சாதகமானவர் என்பதால் பலரும் பிட்காயின்களில் முதலீடு செய்தனர்.

இந்த நிலையில் பிட்காயினின் மதிப்பு தன்னுடைய வரலாறு காணாத உச்ச விலையில் இருந்து 25% வரை சரிந்துள்ளது. வெள்ளியன்று பிட்காயின் மதிப்பு அதிக சரிவை கண்டது. ஆசிய நாடுகளின் சந்தைகள் அனைத்துமே பெரிய சரிவில் உள்ளன. முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று சந்தையை விட்டு வெளியேறுவதே இதற்கு காரணம். அதே தான் தற்போது பிட்காயினிலும் எதிரொலிக்கிறது.
சிங்கப்பூரில் பகல் 12.05 மணி அளவில் பிட்காயின் 79,627 டாலர் என்ற மதிப்பில் தான் வர்த்தகமானது. நவம்பர் மாதம் 10ஆம் தேதிக்கு பின்னர் பிட்காயின் மதிப்பு இவ்வளவு மோசமாக சரிவது இதுவே முதல்முறையாகும். அதே போல எதெர் கிரிப்டோ 7.3 சதவீதமும், சோலேனா கிரிப்டோ டோக்கன் 7.1 சதவீதமும் சரிந்துள்ளன.
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அப்போது டொனால்ட் டிரம்ப் தான் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது உறுதியான உடன் பிட்காயினின் மதிப்பு வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதே போல கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி டிரம்ப் அதிபராக பதவியேற்ற போதும், ஒரு பிட்காயின் மதிப்பு 1,09,241 டாலர் என உயர்ந்தது. இதனை அடுத்து டிரம்ப் கிரிப்டோ கரன்சி தொடர்பாக பாசிட்டிவான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் டிரம்ப் தரப்பில் கிரிப்டோ கரன்சி குறித்த எதிர்பார்த்த அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்நிலையில் பிட்காயின் மதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போதைக்கு டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அரசு செலவினங்களை குறைப்பது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகிறார்.
டிரம்ப் ஆசிய நாடுகள் மீது பதில் வரி விதிப்போம் என்ற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். இதனால் ஆசிய நாடுகளின் பங்குச்சந்தை ஆட்டம் கண்டுள்ளன. குறிப்பாக இந்திய பங்குச்சந்தை இறக்கத்திலேயே இருக்கிறது. இது மேலும் இறங்கலாம் என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் கிடைத்த வரை லாபம் என பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.
அதே போன்ற ஒரு நிலை தான் பிட்காயினுக்கும் ஏற்பட்டுள்ளது. மேக்ரோ பொருளாதார சூழலை பார்க்கும் போது இது கணிக்க தக்கது தான் என பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். டிரம்ப் தரப்பில் கிரிப்டோ கரன்சிகளை வலுப்படுத்தும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டால் தான் இந்த நிலை மாறும் என்கின்றனர்.
அமெரிக்காவில் பிட்காயின் ஈடிஎஃப்களில் செய்யப்பட்டிருந்த முதலீடுகளில் 1 பில்லியன் டாலர்கள் வரை முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர். இது ஒரே நாளில் நடந்துள்ளது. இதனால் தான் பிட்காயின் மதிப்பு வேகமாக சரிந்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!



Click it and Unblock the Notifications