டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் பிஜ்வாசன் தொகுதியின் முடிவுகளை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதற்கு ஒரே காரணம் கைலாஷ் கெலாட். ஆம் ஆத்மி அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்க அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட் தற்போது இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் கண்டு இருப்பதே இதற்கு காரணம்.
1974 ஜூலை 22ம் தேதியன்று தென் மேற்கு டெல்லியில் நஜாஃப்கர் பகுதியில் மித்ரான் என்ற கிராமத்தில் கைலாஷ் கெலாட் பிறந்தார். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை, சட்ட இளங்கலை மற்றும் சட்ட முதுகலைப் பட்டம் உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றவர்.

கைலாஷ் கெலாட் அரசியலுக்கு வருவதற்கு முன் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். ஆம் ஆத்மி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்று, டெல்லி அரசாங்கத்தில் போக்குவரத்து, வருவாய், சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு தீவிர விசுவாசமாக இருந்து வந்தார். 2018ல் வரி ஏய்ப்பு வழக்கில், வருமான வரித்துறை இவரிடம் விசாரணை நடத்தியது. மேலும் அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இருந்தபோதிலும், கைலாஷ் கெலாட் ஆம் ஆத்மியில் தொடர்ந்தார்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் கடந்த நவம்பரில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி அடுத்த நாளே பாஜகவில் இணைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பிஜ்வாசன் தொகுதியில் பாஜக வேட்பாளராக கைலாஷ் கெலாட் களம் இறங்கினார்.
அவரை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் சுரேந்தர் பரத்வாஜ் மற்றும் காங்கிரஸ் சார்பில் தர்மபால் சண்டேலா உள்ளிட்டோர் போட்டியிட்டனர். தேர்தலுக்கு சில மாதங்களே இருந்தபோது, ஆம் ஆத்மியிலிருந்து அவர் பாஜக மாறியதால் கைலாஷ் கெலாட்டின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது கேள்வி குறியாக இருந்தது. அதேசமயம், இவர் பல பாஜக வேட்பாளர்களிடமிருந்து மாறுபட்ட பிரச்சார அணுகுமுறையை கையாண்டார்.
ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசுகையில், 10 ஆண்டுகள் அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் இருந்த அனுபவத்தின் அடிப்படையில இதை சொல்கிறேன். சட்ட கட்டமைப்பு என்னவென்றால், துணை நிலை கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் நீங்கள் (டெல்லி அரசால்) எதையும் செய்ய முடியாது.
நேரம் முழுவதையும் வாக்குவாதங்களிலும், பழி சுமத்துவதிலும் செலவிடாமல் துணை நிலை கவர்னர் மற்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் ஒரு கட்சியையும் அரசாங்கத்தையும் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற்றது. இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தற்போதைய நிலவரப்படி, பாஜக 45 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதேசமயம், ஆளும் கட்சியான ஆம் ஆத்மி 25 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. பிஜ்வாசன் தொகுதியில் பாஜக வேட்பாளா கைலாஷ் கெலாட் முன்னிலையில் உள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications