டாப் 10 மாநிலங்களில் 6-ல் பாஜக ஆட்சி..! ஆதாரம் காட்டும் CMIE..!

கடந்த 2017 - 18 நிதி ஆண்டில், ஒட்டு மொத்த இந்தியாவில், வேலை இல்லா திண்டாட்டம், 6.1 சதவிகிதத்தைத் தொட்டது. இதை தேசிய புள்ளியியல் மாதிரி அமைப்பும் (NSSO) உறுதி செய்து இருந்தது.

அதாவது 100 பேர் வேலை பார்க்கத் தயாராக இருக்கிறார்கள் என்றால், அதில் 6.1 பேருக்கு வேலை இல்லை. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேலை இல்லா திண்டாட்டப் பிரச்னை எனச் சொன்னார்கள்.

ஆனால் இன்று வரை நிலைமை சீரடையவில்லை, அப்படியேத் தான் இருக்கிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக அளவில் வேலை இல்லா திண்டாட்டம் இருப்பதாகச் சொல்கிறது, ஒரு தனியார் நிறுவவனத்தின் தரவுகள். அதில் சில அதிர்ச்சிகரமான தரவுகளைத் தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

கடந்த 20 ஆண்டுகள் அதிகம்

கடந்த 20 ஆண்டுகள் அதிகம்

1998 -ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையான ஸ்டாடிஸ்டா நிறுவனத்தின் புள்ளி விவரங்களைப் பார்த்தால், கடந்த 2016-ம் ஆண்டு தான் இந்திய இளைஞர்கள் அதிகம் பேர் வேலை இல்லாமல் இருந்து இருக்கிறார்கள். 2016-ம் ஆண்டில், வேலை பார்க்கத் தயாராக இருக்கும் இளைஞர்களில் 10.61 பேருக்கு வேலையே இல்லை.

கடந்த 2019-ல்

கடந்த 2019-ல்

CMIE என்கிற தனியார் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தரவுகளில், கடந்த 2019-ம் ஆண்டிலேயே, அக்டோபர் 2019-ல் தான் அதிக அளவில் வேலை இல்லா திண்டாட்டம் இருந்து இருக்கிறது. அக்டோபர் 2019-ல் ஒட்டு மொத்த இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் 8.45 சதவிகிதமாகவும், இந்திய நகர் புறங்களில் 8.84 சதவிகிதமாகவும், இந்திய கிராம புறங்களில் 8.26 சதவிகிதமாக இருந்து இருக்கிறது.

நகர் புறங்களில்

நகர் புறங்களில்

இந்திய நகர் புறங்களில், கடந்த 2019-ம் ஆண்டில், எந்த மாதத்தில் அதிக அளவில் வேலை இல்லா திண்டாட்டம் இருந்து இருக்கிறது எனப் பார்த்தால் ஆகஸ்ட் மாதம் தான் முதல் இடம் பிடிக்கிறது. ஆகஸ்ட் 2019-ல், இந்திய நகர் புறங்களில் வேலை இல்லா திண்டாட்டம் 9.71 சதவிகிதமாக இருந்து இருக்கிறது. அதாவது 100-க்கு 9.71 பேருக்கு வேலை இல்லை.

கிராம புறங்களில்

கிராம புறங்களில்

இந்திய கிராம புறங்களில், கடந்த 2019-ம் ஆண்டில், எந்த மாதத்தில் அதிக அளவில் வேலை இல்லா திண்டாட்டம் இருந்து இருக்கிறது எனப் பார்த்தால் ஆகஸ்ட் மாதம் தான் முதல் இடம் பிடிக்கிறது. இந்தியாவின் பண்டிகை காலமான அக்டோபர் 2019-ல், இந்திய கிராம புறங்களில் வேலை இல்லா திண்டாட்டம் 8.26 சதவிகிதமாக இருந்து இருக்கிறது. அதாவது 100-க்கு 8.26 பேருக்கு வேலை இல்லை.

அதிக வேலை இல்லா திண்டாட்டம்

அதிக வேலை இல்லா திண்டாட்டம்

கடந்த டிசம்பர் 2019 மாதத்தில், எந்த மாநிலத்தில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகமாக இருந்து இருக்கிறது எனப் பார்த்தால், பாஜக ஆளும் திரிபுரா மாநிலம் தான். 28.6 சதவிகிதம் பேருக்கு வேலை இல்லையாம். திரிபுரா மாநில மக்களில் வேலைக்கு போகத் தயாராக இருக்கும் 100 பேரில் 28.6 பேருக்கு வேலை இல்லை என அதிர்ச்சி கொடுக்கிறது சி எம் இ ஐ.

இரண்டாம் இடம்

இரண்டாம் இடம்

இந்தியாவிலேயே அதிக வேலை இல்லா திண்டாட்டம் இருக்கும் மாநிலத்தில் ஹரியானா மாநிலம் இரண்டாவது இடம் பிடித்து இருக்கிறது. இதுவும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநிலத்தின் ஒட்டு மொத்த வேலை இல்லா திண்டாட்டம் 27.6 சதவிகிதமாம். அதாவது 100 பேரில் 27 பேருக்கு வேலை இல்லை. அந்த அளவுக்கு நிலைமை கொடூரமாக இருக்கிறது.

உத்திரப் பிரதேசம்

உத்திரப் பிரதேசம்

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா போராட்டத்தில் பங்கு பெற்றவர்களுக்கு எல்லாம், பொது சொத்தை சேதப்படுத்தியதாகச் சொல்லி நூதன முறையில் அபராதம் வசூலிக்கும் நம் உத்திரப் பிரதேசம் தான் இந்தியாவிலேயே அதிக மக்கள் வாழும் மாநிலம். இந்த மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் வேலை இல்லா திண்டாட்டம் 5.91 சதவிகிதமாக இருந்தது. இந்த 2019-ல் 9.91 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. ஆக, பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆளும் மாநிலத்தில் வேலை இல்லா திண்டாட்டம் சுமார் 67சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.

டாப் 10-ல் 7 பாஜக

டாப் 10-ல் 7 பாஜக

இந்தியாவில் அதிக அளவில் வேலை இல்லா திண்டாட்டம் இருக்கும் டாப் 10 மாநிலங்களில், 7 மாநிலங்களை பாஜக ஆட்சி செய்த அல்லது செய்து வரும் மாநிலங்கள் தான். இந்த 7 மாநிலங்களில் ஜார்கண்டில் கடந்த டிசம்பர் 29, 2019-ல் தான் பாஜக தன் ஆட்சியை இழந்தது. எனவே 10-ல் 7 மாநிலங்கள் என கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

பட்டியல்

பட்டியல்

கடந்த டிசம்பர் 2019-ம் மாதத்தில், வேலை இல்லா திண்டாட்டம் அதிகம் இருக்கும், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களின் பட்டியல் இதோ. டாப் 10-ல் எத்தனையாவது இடம், மாநிலத்தின் பெயர், வேலை இல்லா திண்டாட்டம் சதவிகிதத்தில் எனக் கொடுத்து இருக்கிறோம்.
1. திரிபுரா - 28.6
2. ஹரியானா - 27.6
3. ஹிமாச்சலப் பிரதேசம் - 20.2
4. ஜார்கண்ட் - 17.7
7. கோவா - 12.1
9. பீஹார் - 11.1
10. உத்திரப் பிரதேசம் 9.4

இப்படி மத்திய அரசின் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்திலேயே இது தான் கதி என்றால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எப்படியாவது நிலைமை சரியானால் சரி தான்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+