தமிழ்நாடு மற்றும் கேரளா-வில் கால் பதிக்கக் கடுமையாக முயற்சித்து வரும் பாஜக, லோக்சபா தேர்தலில் தென்னிந்தியாவின் இரு மாநிலங்களிலும் எவ்வளவு இடங்களைக் கைப்பற்றும் என பிரபல பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார்.
பிரபல பொருளாதார நிபுணரும் அரசியல் ஆய்வாளருமான சுர்ஜித் பல்லா தேசிய மற்றும் சர்வதேச பொருளாதார கொள்கை வடிவமைப்பில் ஈடுபட்டவர். இதேபோல் IMF அமைப்பின் இந்தியப் பிரிவின் தலைவராக இருந்தவர் சுர்ஜித் பல்லா. ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி நடந்து வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 2019 தேர்தல் செயல்திறனை விஞ்சிவிடும் என்று தான் எதிர்பார்ப்பதாக சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார்.

பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், சுர்ஜித் பல்லா 'ஹவ் வி வோட்' என்ற தனது புதிய புத்தகத்தில் வாக்களிக்கும் வாக்காளர்களின் மனநிலையை விவரித்து எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி நடந்து வரும் பொதுத் தேர்தலில் 330 முதல் 350 இடங்கள் வரை வெற்றிபெற முடியும் எனக் கூறியுள்ளார் பொருளாதார நிபுணரும் அரசியல் ஆய்வாளருமான சுர்ஜித் பல்லா.
2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 303 உட்பட 353 இடங்களை என்டிஏ கூட்டணி கைப்பற்றி அரியணையில் ஏறியது. இந்த தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
"புள்ளிவிவர சாத்தியக்கூறுகளின் அடிப்படையில், பிஜேபி சொந்தமாக 330 முதல் 350 இடங்களைப் பெற வேண்டும். இது பாஜக மட்டுமே, அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்க்கவில்லை" என்று சுர்ஜித் பல்லா கூறியதாக NDTV தெரிவித்துள்ளது.
2019 லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடுகையில், பாஜக வெற்றி பெற்ற இடங்கள் ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். சுர்ஜித் பல்லாவின் கூற்றுப்படி, காங்கிரஸ் 44 இடங்களைப் பெறலாம் அல்லது 2014 தேர்தலில் வென்றதை விட 2 சதவீதம் குறைவாகப் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளா: பாரதிய ஜனதா கட்சி பலவீனமான கட்சியாக இருக்கும் தமிழகத்தில் பாஜக குறைந்தது ஐந்து இடங்களையாவது வெல்லக்கூடும் என்றும் சுர்ஜித் பல்லா கணித்துள்ளார். "தமிழகத்தில் பாஜக ஐந்து இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கேரளாவில் ஒன்று அல்லது இரண்டாக இருக்கலாம்" என்று சுர்ஜித் பல்லா கூறியுள்ளார்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications