கருப்பு திங்கள்.. பயமுறுத்தும் ஜப்பான், கொரியா வர்த்தகம்.. GIFT நிஃப்டி 900 புள்ளிகள் சரிவு..!!

இந்திய பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை கடும் சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிஃப்டி 50 குறியீட்டில் இருக்கும் பங்குகளின் பியூச்சர்ஸ் வர்த்தகத்தை கண்காணிக்கும் குறியீடான GIFT நிஃப்டி காலை 6.30 மணி வர்த்தக தொடக்கத்தில் 900 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்தது.

இந்த மோசமான சரிவு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகள் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது, மிகவும் மோசமான வர்த்தகத்தை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மார்ச் 4-ஆம் தேதி வர்த்தக நாளில் பதிவான மோசமான வர்த்தகத்திற்கு இணையாக இன்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்பு திங்கள்.. பயமுறுத்தும் ஜப்பான், கொரியா வர்த்தகம்.. GIFT நிஃப்டி 900 புள்ளிகள் சரிவு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வரி அறிவிப்புக்கு பிறகு அமெரிக்க சந்தையில் கடந்த வாரம் ஏற்பட்ட சரிவு, இன்று ஜப்பானிய பங்குச்சந்தைகளை கடுமையாக பாதித்துள்ளது. பல சந்தை நிபுணர்கள் ஏப்ரல் 7 வர்த்தகத்தை கருப்பு திங்கள் ஆக இருக்கும் என்றும் எச்சரித்தனர். இதற்கு ஏற்றார் போல் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது சர்வதேச சந்தையில் பெரிய சரிவு ஏற்பட்டு உள்ளது.

இன்று ஜப்பான் நாட்டின் நிக்கேய் 225 குறியீடு சந்தை திறந்த சிறிது நேரத்தில் சுமார் 9% வீழ்ச்சியடைந்தது. ஜப்பானிய வங்கி பங்குகளின் குறியீடு 17% வரை சரிந்தது. நிக்கேய் 2023 அக்டோபருக்குப் பிறகு முதல் முறையாக 30,792.74 புள்ளிகளை எட்டியுள்ளது.

இதேபோல் Topix குறியீடு காலை வர்த்தகம் துவங்கும் போது 8% குறைந்து 2,284.69 புள்ளிகளை அடைந்தது. ஜப்பான் சந்தை சர்க்யூட் பிரேக்கர்களை எட்டியதால் ஜப்பானிய பியூச்சர்ஸ் வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சீனாவின் CSI300 ப்ளூ சிப் குறியீடு 4.5% குறைந்தது. ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு ஆரம்ப வர்த்தகத்தில் 8% குறைந்தது அடுத்த சோகத்தை கொடுத்தது. மேலும் அலிபாபா மற்றும் டென்சென்ட் பங்குகள் 8% க்கும் அதிகமாக சரிந்தன. சிங்கப்பூர் பங்குகளும் 7% க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தன.

ஆஸ்திரேலிய ப்ளூ சிப் பங்குகளின் S&P/ASX 200 குறியீடு சந்தை திறந்தவுடன் 6.07% சரிந்தது. இந்த S&P/ASX 200 (XJO) குறியீட்டில் ஆஸ்திரேலிய நாட்டின் மிகப்பெரிய 200 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு உள்ள முக்கியமான குறியீடாகும்.

தென் கொரியாவில், கோஸ்பி குறியீடு 4.34% வீழ்ச்சியடைந்தது மற்றும் ஸ்மால் கேப் கோஸ்டாக் 3.48% சரிந்தது. இப்படி ஆசிய சந்தை குறியீடுகள் அனைத்தும் மோசமான சரிவை பதிவு செய்திருக்கும் வேளையில் அன்னிய முதலீடுகளின் ஆதிக்கத்தில் இயங்கும் இந்திய பங்குச்சந்தை இன்று மோசமான சரிவை சந்தைக்கும் என தெரிகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரெசிப்ரோக்கல் வரி அறிவிப்பு, சர்வதேச சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானிய சந்தைகளின் வீழ்ச்சி, ஆசிய சந்தைகள் முழுவதும் பரவி, இந்திய சந்தைகளையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

GIFT நிஃப்டியின் வீழ்ச்சி, இந்திய முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது. இந்த சர்வதேச வர்த்தக பதற்றங்கள், இந்திய பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

இந்த சரிவு, உலகளாவிய வர்த்தக போரின் தொடக்கமா என்ற அச்சத்தை முதலீட்டாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா, சீனா ஆகியவை வரிகளை விதித்திருக்கும் வேளையில், வியட்நாம் 0 வரி விதிப்புக்கு தயார் என அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகியுள்ளது.

இதன் மூலம் சர்வதேச வர்த்தக சந்தைகளின் நிலையற்ற தன்மை அதிகரித்து, இந்திய பங்குச்சந்தைகளில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் அச்சம் உள்ளது. இந்திய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை கவனமாக கையாள வேண்டும் மற்றும் சந்தை நிலவரங்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+