இந்தியா ஆட்டோமொபைல் துறையின் முக்கிய உச்சமாக பார்க்கப்படும் வகையில் உலக நாடுகளில் இதுவரையில் எந்தொரு நாட்டிலும் அறிமுகம் செய்யப்படாத 100 சதவீதம் எத்தனால் மட்டுமே எரிபொருளாக கொண்டு இயங்கும் டோயோட்டா இன்னோவா கார்-ஐ இன்று மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நித்தின் கட்கரி அறிமுகம் செய்து வந்தார்.
எப்படி இந்தியாவில் தங்கம் இல்லாத காரணத்தால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோமோ அதேபோல் கச்சா எண்ணெய் வளமும் இல்லாத காரணத்தால் ரஷ்யா மற்றும் பல வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்கிறது.

இதை குறைக்கவும், படி படிப்படையாக நிறுத்தும் வரையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் எத்தனால், பிற கிரீன் எனர்ஜி மூலம் இயங்கும் கார்களையும், வாகனங்களையும் அதிகளவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதன் முதல் படியாக இன்று மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி சுற்றுசூழலுக்கு ஏதுவான மற்றும் மாற்று எரிபொருளில் இயங்கும் எஸ்யூவி கார்-ஐ அறிமுகம் செய்துள்ளார்.
எத்தனால் என்பது இந்தியாவில் தயாரிக்கப்படுவது மட்டும் அல்லாமல் கரும்பு, சோளம், பார்லி ஆகியவற்றின் விவசாய கழிவுகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த எத்தனால் 46 ரூபாய் முதல் 65 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது, இது மாஸ் ப்ரொடக்ஷனுக்கு வரும் போது 40 ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படலாம்.
இந்தியாவில் எப்படி எலக்ட்ரிக் வாகனங்கள் புதிய டிரெண்டாகியுள்ளதோ, அடுத்த சில மாதத்தில் எத்தனால் மூலம் இயங்கும் கார்களும், அடுத்த சில வருடத்தில் ஹைடர்ஜென் பியூல் செல் மூலம் இயங்கும் ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் கார்கள் டிரெண்டாகும்.

இன்று மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் பிஎஸ் 6 ஸ்டோஜ் 2 ஃப்ளெக்ஸ் பியூயல் வாகனத்தின் மாதிரியை அறிமுகம் செய்தார். இவருடன் மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கனரக வாகன துறை அமைச்சர் எம்என் பாண்டே, டோயோட்டா சிஇஓ Masakazu Yoshimura, கிரிலோஸ்கார் சிஸ்டம்ஸ் தலைவர் கீதாஞ்சலி கிர்லோஸ்கர், ஜப்பான் தூதரக அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
உலகளவில் முதல் முறையாக டோயோட்டா நிறுவனம் தனது இன்னோவா ஹைகிராஸ் BS 6 (Stage II) ஃப்ளெக்ஸ் பியூயல் காரின் மாதிரி டெல்லியில் இன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாதிரி கார் பல வகையில் மேம்படுத்தப்பட்டு, மாஸ் உற்பத்திக்கு ஒப்புதல் பெற்ற பின்பு மக்களின் பயன்பாட்டுக்கு வரும்.
இந்த காரின் ஸ்பெஷாலிட்டியே இது எத்தானலில் இயங்கும் இன்ஜின் உடன் ஹைப்ரிட் எலக்ட்ரிக் காராக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த காரின் இன்ஜினில் Flex Fuel technology பயன்படுத்தப்பட்டுள்ளது, இத்தகைய தொழில்நுட்பம் மூலம் அதிகப்படியான எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்தி கார்களை இயக்க முடியும்.

Flex Fuel technology பயன்படுத்தி பிரேசில் நாட்டில் சுமார் 48 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருள் வைத்து கார்கள் இயக்கப்படுகிறது. ஆனால் இன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ள இன்னோவா Flex Fuel இன்ஜின் மூலம் கிட்டத்தட்ட 100 சதவீதம் அதாவது 93 சதவீதம் எத்தானல் கலக்கட்டப்பட்ட எரிபொருள் கொண்டு இந்த கார்களை இயக்க முடியும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications