Blackhall Colliery, இங்கிலாந்து: பிளாக் ஹால் கொல்லிரி என்பது ஒரு கிராமத்தின் பெயர். இந்த கிராமம், இங்கிலாந்தில் துர்ஹம் (Durham) என்கிற கவுண்டியில் இருக்கிறது.
இந்த கிராமத்தின் கடற்கரைகள் அத்தனை புகழ் பெற்றது. பல ஹாலிவுட் படங்களின் க்ளைமேக்ஸ் காட்சிகள், இந்த கிராமத்தின் கடற்கரையில் படமாக்கப்பட்டு இருக்கிறது.
இப்போது இந்த கிராமம், தலைப்புச் செய்தியாவதற்கு ஒரு முக்கிய காரணம் பணம். ஆம் மக்கள் கையில் அசால்டாக 1,80,000 ரூபாய் கிடைத்துக் கொண்டே இருப்பதால் தலைப்புச் செய்தி ஆகி இருக்கிறது.
கிராமம்
இந்த கிராமத்தின் சுரங்கத் தொழில்கள் கடந்த நூற்றாண்டில் வெறித்தனமாக நடந்ததாம். ஆனால் 1981-ம் ஆண்டு சுரங்க வேலைகள் எல்லாம் காலி ஆகிவிட்டது. எனவே ஒரு காலத்தில், சொந்த ஊரில் ஓஹோ என வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம், இப்போது வேறு இடங்களுக்குச் சென்று வேலை பார்த்து வருகிறார்களாம்.
பணம் மர்மம்
இந்த கிராமத்தில், பிரதான சாலைகளில் தொடர்ந்து பணக் கட்டுகள் கிடைத்துக் கொண்டே இருக்கிறதாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 13 முறை 20 பவுண்ட் ஸ்டெர்லிங் கட்டுகள் ()1 கட்டு = 20 * 100 = 2,000 பவுண்ட்) 26,000 பவுண்ட் ஸ்டெர்லிங் சாலைகளில் அனாமத்தாக கிடந்ததாகச் சொல்கிறார்கள் காவலர்கள். அதுவும் குறிப்பாக 20 பவுண்ட் ஸ்டெர்லிங் கட்டுகள் மட்டும் கிடந்ததாம். ஆக 20 * 100 = 2000 பவுண்ட் ஸ்டெர்லிங். 2000 * 90 = 1.8 லட்சம் ரூபாய்.
மக்கள் பொறுப்பு
இப்படி சாலைகளில் கிடக்கும் பணம் எங்கோ சந்து பொந்துகளில் எல்லாம் வைப்பதில்லை. பொது வெளியில் அப்பட்டமாக எல்லார் கண்களும் படும் விதத்தில் தான் சாலையில் கிடக்கும். இந்த பிளாக் ஹால் கிராம மக்களில் யாராவது ஒருவர் வந்து இந்த பணத்தை காவலர்களிடம் கொடுப்பார்கள் என துர்ஹம் கவுண்டியின் காவல் துறை அதிகாரிகளே கிராம மக்களைப் பாராட்டுகிறார்கள்.
சமீபத்தில்
இந்த பண மர்மத்தின் தொடர்ச்சியாக, கடந்த திங்கட் கிழமையும் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. இந்த 2019- இப்படி சாலையில் பணக் கட்டு கிடைப்பது இது நான்காவது முறை. இந்த முறையும் ஒரு 20 பவுண்ட் ஸ்டெர்லிங் கட்டு சாலையில் அனாமத்தாக கிடந்து இருக்கிறது. இந்திய மதிப்பில் 1.8 லட்சம் ரூபாய்.
ஒப்படைப்பு
வழக்கம் போல ஒரு கிராம வாசி, காவலர்களிடம் பணக் கட்டு கீழே கிடந்ததாகச் சொல்லி ஒப்படைத்து இருக்கிறார். சர்வதேச ஊடகங்கள், இந்த பிளாக் ஹால் கிராமத்தை, பிரிட்டனிலேயே மிக நேர்மையான கிராமம் என பாராட்டும் அளவுக்கு பேர் எடுத்துவிட்டார்கள்.
இந்தியா
நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் கதை தான் நினைவுக்கு வருகிறது. நம் இந்தியாவிலும் இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..? நமக்கு அடுத்து வரும் தலைமுறையாவது தங்களுக்கு சொந்தமில்லாத பொருளை, முறையாக அரசிடம் ஒப்படைக்க பழகட்டும். நாடு நல்லரசு ஆகட்டு. தானே வல்லரசு ஆகிவிடும்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications