உலகின் மிகப்பெரிய தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் பிளாக்ஸ்டோன் நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய ஸ்னாக்ஸ் நிறுவனமான ஹல்திராம்ஸ்-ல் பெரும் பகுதி பங்குகளை வாங்குவதற்கு, இந்நிறுவனத்தின் நிர்வாகம் செய்யும் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தற்போது கிடைத்துள்ள தகவல் படி பிளாக்ஸ்டோன் சுமார் 70,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்நிறுவனத்தின் அதிகப்படியான பங்குகளை வாங்குவதாகத் தெரிகிறது. குறைந்தபட்சம் ஹல்திராம்ஸ் நிர்வாக குழுவில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கான பங்குகளை பிளாக்ஸ்டோன் வாங்கும் என தெரிகிறது.

ஹல்திராம்ஸ் பங்குகளை முன்பு டாடா குழுமம் வாங்குவதற்காகப் பேச்சுவார்த்தை துவங்கி, பின்னாளில் நிறுவனத்தின் மதிப்பீடு அதிகமாக இருக்கும் காரணத்தால் கைப்பற்றும் திட்டத்தைக் கைவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இத்தகைய பேச்சுவார்த்தை நடக்கவில்லை என டாடா குழுமம் விளக்கம் கொடுத்தது. இதன் பின்பு தான் ஹல்திராம்ஸ் இந்திய முதலீட்டுச் சந்தையில் முக்கிய விற்பனை பொருளாக மாறியது.
ஹல்திராம்ஸ் பங்குகளை பிளாக்ஸ்டோன் நிறுவனத்துடன் இணைந்து, அபுதாபி முதலீட்டு ஆணையம் (ADIA) மற்றும் சிங்கப்பூரின் அரசு முதலீட்டு நிறுவனமான ஜி.ஐ.சி (GIC) ஆகிய நிறுவனங்கள் இணைந்த உருவாக்கிய Blackstone’s global funds மூலம் இந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஹல்திராம்ஸ் குழுமத்தின் டெல்லி மற்றும் நாக்பூரைச் சேர்ந்த அகர்வால் குடும்பத்தினருடன் பிளாக்ஸ்டோன் கடந்த சில மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால், நிறுவனத்தின் மதிப்பீடு காரணத்தால் , பேச்சுவார்த்தை தாமதமாகி வருகிறது.
பிளாக்ஸ்டோன் கூட்டமைப்பு ஹல்திராம்ஸ் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகளை வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மே மாதம் தகவல் வெளியானது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இருதரப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் வேகமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தற்போது கிடைத்துள்ள தகவல் படி ஹல்திராம்ஸ் 76 சதவீத பங்குகளை விற்பதாகவும், சில அகர்வால் குடும்பத்தினர் 51 சதவீத பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய விரும்புகின்றனர் என்றும், 74 சதவீத பங்குகள் வரை விற்பனை செய்யப்படலாம் என்றும் பலதரப்பட்ட தகவல் வெளியாகி வருகிறது.
இந்த ஒப்பந்தம் கைகூடி வந்தால், இதுவரை இந்தியாவில் நடைபெற்ற தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களின் மிகப்பெரிய பங்கு கைப்பற்றலாக இது இருக்கும்.


Click it and Unblock the Notifications