இந்தியாவின் மிகப்பெரிய உணவு டெலிவரி சேவை நிறுவனமான Zomato-ன் தலைமை நிர்வாக அதிகாரி தீபேந்தர் கோயல், சமீபத்தில் மெக்சிகோவில் பிறந்த கிரேசியா முனோஸ் என்ற முன்னாள் மாடல் மற்றும் தற்போதைய தொழிலதிபரான கிரேசியா முனோஸ் என்பவரை 2வது திருமணம் செய்துகொண்ட செய்தி இணையத்தில் டிரெண்டிங் ஆனது.
இந்த நிலையில், சோமேட்டோ கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் இயங்கி வரும் Blinkit கடந்த ஒரு வருடத்தில் அடுத்தடுத்து புது புது பொருட்களைத் தனது டெலிவரி தளத்தில் சேர்த்து அசத்தி வருகிறது.

சமீபத்தில் சோமேட்டோ-வின் குவிக் காமர்ஸ் தளமான Blinkit-ல் கோடை விடுமுறையைக் கொண்டாடும் வகையில் இன்றைய இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் ப்ளேஸ்டேஷன் 5-ஐ விற்பனை செய்ய பட்டியலிட்டது.
பொதுவாகக் குவிக் காமர்ஸ் தளங்களில் மக்களின் தினசரி தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்கள் மட்டுமே விற்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்றவையும் விற்கப்பட்டு வந்தது இந்த நிலையில் சோமேட்டோ ஒருகட்டத்திற்கு மேலே சென்றது.
கடந்த ஒரு வாரத்தில் ப்ளேஸ்டேஷன் 5 மற்றும் அதற்குத் தேவையான கண்ட்ரோலர், கேம் சிடி ஆகியவற்றை 10 நிமிட டெலிவரியில் தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்தது. இதற்கு அடுத்தாக கோடை வெயிலைத் தணிக்கும் Atomberg சீலிங் பேன்-ஐ வெறும் 12 நிமிடத்தில் டெலிவரி செய்யும் புதிய சேவையைக் கொண்டு வந்தது.
இதை தொடர்ந்து தற்போது லெஸ்கார்ட் உடன் இணைந்து சன்கிளாஸ் மற்றும் கம்பியூட்டர் கிளாஸ்-களை 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் சேவையை கொண்டு வந்துள்ளது. ஈகாமர்ஸ் வர்த்தகத்தைத் தாண்டி தற்போது குவிக் காமர்ஸ்-க்குள் நுழைய முன்னணி பிராண்டுகள் ஆர்வமாகியுள்ளது.
சோமேட்டோவின் பிளிங்கிட் போலவே Zepto, Swiggy Instamart ஆகியவை இதேபோல் அடுத்தடுத்து பல பிராண்டுகளை இணைக்கும் பணியில் தீவிரமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications