இரண்டு முன்னணி டெலிவரி தளங்களான பிளிங்கிட் மட்டும் ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகள் தங்களுடைய அதிகாரப்பூர்வ பதவிகளை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து விட்டு புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களுக்காக டெலிவரி பணியை செய்து தனித்துவமான முறையில் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். பிளிங்கிட் நிறுவனத்தின் CEO அல்பிந்தர் திண்ட்சா தன் டெலிவரி அனுபவத்தை X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புத்தாண்டுக்காக அல்பிந்தர் குருகிராமில் உள்ள பிளிங்கிட் கடையில் பத்து நிமிட டெலிவரி சேவைக்காக ஆர்டர்களை பேக் செய்து டெலிவரி செய்துள்ளார். "இந்த ஆண்டு புத்தாண்டை எங்கள் கடைகளில் இருந்து தொடங்குகிறேன்.. என்று தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார். அதோடு மஞ்சள் நிற டெலிவரி ஏஜென்ட் ஜாக்கெட்டை அவர் அணிந்திருக்கும் புகைப்படத்தையும் போஸ்ட் செய்திருந்தார்.

அல்பிந்தர் இன்னொரு பதிவில், ஒரு ஆர்டரை எடுத்து பேக் செய்ய போவதாக தெரிவித்தார். அதற்கு எத்தனை மணி நேரம் ஆகும் என்று பார்ப்போம் என்றும் கிண்டலாக பதிவிட்டிருந்தார்.
அதன் பிறகு இன்னொரு பதிவில் உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் நிறைந்த ஒரு பையை பகிர்ந்து, அதை 3 நிமிடங்களுக்குள் வெற்றிகரமாக பேக் செய்ததாக கூறினார். "இதை பேக் செய்ய எனக்கு 2 நிமிடம் 57 வினாடிகள் ஆனது. ஆனால் கடையில் சராசரியாக பேக் செய்யும் நேரம் 1 நிமிடம் 46 வினாடிகள் மட்டுமே என்பதையும் அவர் குறிப்பிட்டு இருந்தார். "தாமதத்திற்காக வருந்துகின்றேன்.. இது யாருடைய ஆர்டர் என்று தெரியவில்லை.. உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்! என்று எழுதியிருந்தார்.

இந்த ஆர்டரை முடித்துவிட்டு அல்பிந்தர் தனது அடுத்த ஆர்டருக்கு விரைவாகச் சென்றார். "ஒரு மினி ஏர் ஹாக்கி டேபிள் மற்றும் சில பொருட்கள் உள்ள ஒரு ஆர்டரை தற்போது எடுத்துள்ளேன்! இதை நான் டெலிவரி செய்யப் போகிறேன்", என்று பதிவிட்டிருந்தார்.
வாடிக்கையாளர் ஆர்டர் செய்த ஏர் ஹாக்கி டேபிளை பெரிய வாகனத்தில் ஏற்றி டெலிவரி செய்துவிட்டு அலுவலகம் திரும்புவதாக அல்பிந்தர் தெரிவித்தார். மஞ்சள் நிற வாகனத்தின் முன்பு நின்று மற்ற பிளின்கிட் டெலிவரி ஏஜெண்ட்களுடன் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications