இந்தியாவில் ஸ்விக்கி, சோமேட்டோ, ஸெப்டோ, பிளிங்கிட் நிறுவனங்கள் மூலம் பல இளைஞர்கள் டெலிவரி ஏஜெண்டுகளாக பணிபுரிந்து வருவாய் ஈட்டும் வாய்ப்பை பெற்றுள்ளனர். கல்லூரி மாணவர்கள் தொடங்கி ஏராளமானவர்கள் பகுதி நேரமாகவும் முழு நேரமாகவும் டெலிவரி பணிகளில் ஈடுபடுவதை நாம் காண முடிகிறது
டெலிவரி ஏஜெண்டுகளாக பணியில் இருப்பவர்கள் பலரும், தனித்துவ திறமைகளை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
அவ்வப்போது இவர்களின் திறமையை வெளிக்கொணரும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாவது உண்டு. அந்த வகையில் பிளிங்கிட் டெலிவரி ஏஜெண்டின் வீடியோ எக்ஸ் தளத்தில் டிரெண்டாகியுள்ளது. பிளிங்கிட்டில் டெலிவரி ஏஜெண்டாக பணிபுரியும் நபர், டெலிவரிக்கு சென்ற இடத்தில் கிடார் வாசிக்கும் வீடியோ சமூகவலைதள வாசிகளின் மனதை கவர்ந்துள்ளது.

சௌமித்திரபரிக் என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில் "பிரசாந்தை பாருங்கள் நான் பிளிங்கிட்டில் ஆர்டர் செய்திருந்த பொருட்களை டெலிவரி செய்வதற்காக என்னுடைய வீட்டிற்கு இவர் வருகை தந்திருந்தார், அப்போது நான் கிட்டார் வாசித்துக் கொண்டிருந்தேன், அவருக்கும் இசையில் ஆர்வம் இருப்பதை கேட்டு தெரிந்து கொண்டேன் அவர் கிட்டார் வாசிக்க அவருக்கு கிட்டார் வாசிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தேன் அவர் மிகச்சிறந்த முறையில் அதனை வாசித்தார்" என அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவை இரண்டு லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடியோவை லைக் செய்துள்ளனர்.
ஒரு பயனாளர் இவருக்கு இசையில் ஆர்வம் இருக்கிறது என்பது இதனைப் பார்க்கும்போது தெரிகிறது, இதனை காரணம் காட்டி பிளிங்கிட் நிறுவனம் டெலிவரி தவிர மற்ற வேலையில் ஈடுபட்டதாக அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுத்து விடக்கூடாது என பதிவிட்டுள்ளார்.
இதனிடையே இந்த வீடியோ பிளிங்கிட் தலைமை செயல் அதிகாரியான அல்பிந்தர் தின்சாவின் பார்வையிலும் பட்டிருக்கிறது. அவர் இந்த வீடியோவிற்கு ஹார்டின் எமோஜியை பதிவிட்டுள்ளார். அண்மையில் கூட டெலிவரி ஏஜெண்ட் ஒருவர் டிராபிக்கில் காத்திருக்கும் போது ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராவதற்கான வீடியோவை பார்த்து படிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் டிரெண்டானது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications